பொது செய்தி

தமிழ்நாடு

'அரசு மருத்துவக்கல்லூரி பணிகள் 37 சதவீதம் நிறைவு'

Added : ஜூலை 26, 2020
Share
Advertisement

நாமக்கல்: ''நாமக்கல் மருத்துவக்கல்லூரி கட்டுமான பணிகள், 37 சதவீதம் நிறைவு பெற்றுள்ளன,'' என, சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா கூறினார். நாமக்கல்லில் நடந்து வரும் மருத்துவக்கல்லூரி கட்டுமான பணிகளை ஆய்வு செய்த அவர், நிருபர்களிடம் கூறியதாவது: நாமக்கல் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை கட்டுமான பணி, வேகமாக நடந்து வருகிறது. மார்ச், 2021க்குள் கட்டுமான பணிகள் முடிக்கப்பட்டு டாக்டர்கள், நர்ஸ், உள்ளிட்ட, 1,340 பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். மருத்துவக்கல்லூரி பணிக்கு, 640 பேர் நியமிக்கப்பட்டு இரண்டு பிரிவுகளாக இரவு, பகலாக வேலை செய்து வருகின்றனர். செப்டம்பர் மாதம் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலையினரும், ஜனவரி மாதம் எம்.சி.ஏ., அதிகாரிகளும் ஆய்வு செய்ய உள்ளனர். அதன் பிறகு மாணவர் சேர்க்கை நடைபெறும். அதற்குள் அனைத்து மருத்துவர்கள், ஊழியர்கள் நியமிக்கப்படுவர். உபகரணங்களும் வாங்கப்படும். கடந்த வாரம், 30 சதவீதம் மட்டுமே முடிக்கப்பட்டிருந்த பணி, இன்று (நேற்று), 37 சதவீதம் முடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X