சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தொழிலாளியின் மனைவி சடலமாக மீட்பு

Added : ஜூலை 26, 2020
Share
Advertisement

எலச்சிபாளையம்: மணலிஜேடர்பாளையம் மயானத்தில், பெண் சடலத்தை போலீசார் மீட்டனர். நாமக்கல் மாவட்டம், மணலிஜேடர்பாளையம் மயானத்தில், முகத்தில் காயத்துடனும், வாயில் ரத்தத்துடனும், உடலில் துணி போர்த்திய நிலையில் ஒரு பெண் சடலம் கிடந்துள்ளது. நேற்று அதிகாலை, அவ்வழியாக சென்றவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், எலச்சிபாளையம் போலீசார் சடலத்தை மீட்டு விசாரித்தனர். பெரிய மணலியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ராஜேந்திரன் மனைவி நாகலட்சுமி, 42, என்பது தெரியவந்தது. இவருக்கு, 21 வயதில் ஒரு மகனும், 19 வயதில் ஒருமகளும் உள்ளனர். மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்களுடன் போலீசார் விசாரணை செய்ததில், இதுவரை எவ்வித தடயங்களும் கிடைக்கவில்லை. தொடர்ந்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X