பொது செய்தி

தமிழ்நாடு

அம்மா மொபட் திட்டம்; விண்ணப்பிக்க அழைப்பு

Added : ஜூலை 26, 2020
Share
Advertisement

கரூர்: தமிழ்நாடு அரசு வாயிலாக ஊரக மற்றும் நகர்ப்புறப் பகுதிகளில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு, அம்மா இருசக்கர வாகனத்திட்டம் செயல்படுத்தப் படுகிறது. தற்போது இருசக்கர வாகனம், 50 சதவீத மானியத்தில் வாங்குவதற்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு, 18 முதல், 45 வயது வரை உள்ள பணிக்குசெல்லும் (அ) சுய தொழில் புரியும், ஓட்டுனர் உரிமம் பெற்றுள்ள, பெண்கள், திருநங்கைகள் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். ஆண்டு வருமானம், 2.50 லட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும். மகளிரை குடும்ப தலைவராக கொண்ட குடும்பம், ஆதரவற்ற மகளிர், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற விதவைகள், 35 வயதிற்கு மேற்பட்ட திருமணம் ஆகாத பெண்கள், திருநங்கைகள், தொலைதூரங்களில் வசிக்கும் பெண்கள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக மானியம், 25 ஆயிரம் ரூபாய் அல்லது வாகன விலையில், 50 சதவீதம் ஆகிய இவ்விரண்டில் எது குறைவானதோ, அத்தொகை மானியமாக வழங்கப்படும். மாற்றுதிறனாளிகளுக்குரிய மூன்று சக்கரவாகனத்திற்கு மானியத் தொகை, 31 ஆயிரத்து, 250 ரூபாய் வழங்கப்படும். வரும் ஆகஸ்ட், 28க்குள் விண்ணப்பிக்க வேண்டும். விபரங்களுக்கு நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் அல்லது www.tamilnadumahalir.org /tnatws.html இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு, கரூர் கலெக்டர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X