பொது செய்தி

தமிழ்நாடு

போக்குவரத்து போலீசார் உள்பட 12 பேருக்கு கொரோனா தொற்று

Added : ஜூலை 26, 2020
Share
Advertisement

கரூர்: இரண்டு போக்குவரத்து போலீசார் உட்பட, 12 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


வேலாயுதம்பாளையத்தைச் சேர்ந்த, 35 வயது ஆண், கரூர் போக்குவரத்து போலீசில், கான்ஸ்டபிளாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு, கடந்த, 23ல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருடன் பணியில் இருந்த, 25க்கும் மேற்பட்ட போலீசாருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அதில், போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரியும், 31 வயது பெண், 49 வயது ஆண் ஆகியோருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள், அரசு மருத்துவ கல்லுரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து, போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன் மற்றும் அந்த வளாகத்தில் செயல்படும் மகளிர் போலீஸ் ஸ்டேஷன் ஆகியவற்றுக்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. வளாகத்தின் வெளியில் போலீசார் பணிகளை செய்து வருகின்றனர். இதைதவிர, பஞ்சப்பட்டியை சேர்ந்த, 51 வயது ஆண், காந்திகிராமத்தைச் சேர்ந்த, 40 வயது ஆண், கரூர் வெங்கமேட்டைச் சேர்ந்த, 78 வயது ஆண், டி.என்.பி.எல்., ஆலை பொறியாளரும், வேலாயுதம்பாளையத்தைச் சேர்ந்தவருமான, 27 வயது ஆண், தோகைமலையை சேர்ந்த, 34 வயது ஆண்கள் இரண்டு பேர், 33 வயது ஆண், 40 வயது ஆண் உட்பட மொத்தம், 12 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X