பொது செய்தி

தமிழ்நாடு

கரூர் மாவட்டத்தில் தொடரும் மழை: மானாவாரி நிலங்களில் சாகுபடி துவக்கம்

Added : ஜூலை 26, 2020
Share
Advertisement

கரூர்: கரூர் மாவட்டத்தில், பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. ஜூன் முதல் வாரம் துவங்க வேண்டிய தென் மேற்கு பருவமழை, நடப்பாண்டு தாமதமாக துவங்கியது. வழக்கமான மழை பொழிவு இல்லாமல் இருந்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக தென் மேற்கு பருவமழை வேகம் காட்டி வருகிறது. அதன் விளைவாக, கரூர் மாவட்டத்தில் கடந்த, ஏழு நாட்களாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. நேற்று காலை, 8:00 மணி வரை, மாவட்டத்தில் சில இடங்களில் மட்டும் பெய்த மழையளவு விபரம்: (மி.மீ.,) கரூர், 4.1, பஞ்சப்பட்டி, 1.2 ஆகிய அளவுகளில் மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் சராசரியாக, 0.44 மி.மீ., மழை பதிவானது. மாவட்டத்தில், மானாவாரி நிலங்கள் அதிகம் உள்ள க.பரமத்தி, அரவக்குறிச்சி, கடவூர் பஞ்.,யூனியன் பகுதிகளில், அதிகளவில் மழை பதிவாகியுள்ளது. இதனால், அந்த பகுதிகளில் எண்ணெய் வித்து பயிர்களான நிலக்கடலை, ஆமணக்கு சாகுபடியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.


அமராவதி அணை நிலவரம்: திருப்பூர் மாவட்டம், உடுமலைபேட்டை அமராவதி அணைக்கு நேற்று காலை, 6:00 மணி நிலரவப்படி வினாடிக்கு, 501 கன அடி தண்ணீர் வந்தது. 90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 48.92 அடியாக இருந்து. வாய்க்கால் மூலம், 11 கன அடி தண்ணீர் வெளியேறியது. நீர்ப்பிடிப்பின் தமிழக பகுதிகளில், 2.2 மி.மீ., மழை பெய்தது.

மாயனூர் கதவணை நிலவரம்: மாயனூர் கதவணைக்கு நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி, 10 ஆயிரத்து 192 கன அடி தண்ணீர் வந்தது. காவிரியாற்றில் குறுவை சாகுபடிக்காக, 9,772 கன அடி தண்ணீரும், இரண்டு பாசன வாய்க்காலில், 420 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X