பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட பகுதி ஆய்வு

Added : ஜூலை 26, 2020
Share
Advertisement

குளித்தலை: தோகைமலையில், சப்- கலெக்டர் ஆய்வு செய்து, நோய் தடுப்பு நடவடிக்கையை விரைவுபடுத்தினார். குளித்தலை அடுத்த, தோகைமலை பஞ்., வேதாச்சலபுரம் பகுதியில், இருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம், அந்த தெருவில், 54 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும், கீழவெளியூரில் வசித்து வரும் ஒருவருக்கு தொற்று உறுதியானதால், மணப்பாறை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், அப்பகுதியில் குளித்தலை சப்-கலெக்டர் ஷேக் அப்துல் ரகுமான் ஆய்வு நடத்தினார். கபசுர குடிநீர், நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகளை வழங்க உத்தரவிட்டார். தாசில்தார் முரளிதரன், வட்டார மருத்துவ அதிகாரி தியாகராஜன், யூனியன் கமிஷனர் ராஜேந்திரன் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X