மதுக்கடையில் அலைமோதிய கூட்டம்; ஒழுங்குபடுத்திய கரூர் டி.ஆர்.ஓ.,| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மதுக்கடையில் அலைமோதிய கூட்டம்; ஒழுங்குபடுத்திய கரூர் டி.ஆர்.ஓ.,

Added : ஜூலை 26, 2020
Share
கரூர்: கரூரில், டாஸ்மாக் மதுக்கடையில் அலைமோதிய கூட்டத்தை, டி.ஆர்.ஓ., ஒழுங்குபடுத்தினார். தமிழகம் முழுவதும் இன்று, நான்காவது வாரமாக பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், நேற்று, கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், கடைகளில் பொருட்களை வாங்க மக்கள் குவிந்தனர். கரூர் பஸ் ஸ்டாண்டையொட்டியுள்ள டாஸ்மாக் மதுக்கடையில் நேற்று இரவு, 7:00 மணிக்கு, சமூக இடைவெளி இல்லாமல்,

கரூர்: கரூரில், டாஸ்மாக் மதுக்கடையில் அலைமோதிய கூட்டத்தை, டி.ஆர்.ஓ., ஒழுங்குபடுத்தினார். தமிழகம் முழுவதும் இன்று, நான்காவது வாரமாக பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், நேற்று, கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், கடைகளில் பொருட்களை வாங்க மக்கள் குவிந்தனர். கரூர் பஸ் ஸ்டாண்டையொட்டியுள்ள டாஸ்மாக் மதுக்கடையில் நேற்று இரவு, 7:00 மணிக்கு, சமூக இடைவெளி இல்லாமல், குடிமகன்கள் மதுபாட்டில்களை வாங்க போட்டி போட்டு கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக ஜீப்பில் சென்ற டி.ஆர்.ஓ., ராஜேந்திரன், மனோகரா கார்னர் பகுதியில் உள்ள மதுக்கடை முன் ஜீப்பை நிறுத்த சொன்னார். கீழே இறங்கியவர், குடிமகன்களை வரிசையாக நிற்கச் சொல்லி, அவர்களது கைகளில் கிருமி நாசினியை தெளிக்க அறிவுறுத்தினார். தொடர்ந்து, இரவு, 7:45 மணி வரை அங்கு நின்று கூட்டத்தை ஒழுங்குபடுத்திவிட்டு, புறப்பட்டு சென்றார். டி.ஆர்.ஓ., ராஜேந்திரன் அங்கு நின்றதால், 'மது பாட்டில்களுக்கு கூடுதல் விலை கேட்கவில்லை. பாக்கி சில்லரையும் சரியாக தந்து விட்டனர்' என, கமெண்ட் அடித்தபடி குடிமகன்கள் சென்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X