சம்பவம் செய்தி

தமிழ்நாடு

உறவினரை அரிவாளால் வெட்டிய வாலிபருக்கு வலை

Added : ஜூலை 26, 2020
Share
Advertisement

குளித்தலை: குளித்தலை அருகே, உறவினரை அரிவாளால் வெட்டிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த, கவுண்டம்பட்டியைச் சேர்ந்தவர் சுப்பையா, 55. இவருடைய அண்ணன் முருகன், 10 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். அதிலிருந்து இரண்டு வீட்டார்களுக்கும் பேச்சுவார்த்தை இல்லை. இந்நிலையில், கடந்த, 22 மாலை, 4:30 மணியளவில், தன் பூந்தோட்டத்தில் வேலை செய்து கொண்டு இருந்த சுப்பையாவிடம், பணம் கேட்டு, முருகன் மகன் செல்வம், 25, தகராறு செய்தார். மேலும், அரிவாளால் அவரது தலை மற்றும் உடலில் வெட்டி காயம் ஏற்படுத்தி, கொலை மிரட்டல் விடுத்தார். பாதிக்கப்பட்ட சுப்பையா குளித்தலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து, செல்வத்தை வலைவீசி தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X