குடிநீர் திட்டத்துக்காக வாங்கிய குழாய்கள் சாலைகளில் கிடக்கும் அவலம்

Added : ஜூலை 26, 2020
Share
Advertisement

கரூர்: கரூர் நகராட்சியில், புதிய குடிநீர் திட்டப்பணிக்காக வாங்கப்பட்ட ராட்சத குழாய்கள், பல மாதங்களாக சாலையில் கேட்பாரற்று கிடக்கின்றன.


கடந்த, 2011ல் விரிவாக்கம் செய்யப்பட்ட கரூர் நகராட்சியில், பழைய நகராட்சிகளான கரூர், தான்தோன்றிமலை, இனாம் கரூர் மற்றும் சணப்பிரட்டி கிராம பஞ்., இணைக்கப்பட்டது. இதில், பழைய சணப்பிரட்டி பஞ்., பகுதியை தவிர, மற்ற நகராட்சி பகுதிகளில், 64 கோடியே, 40 லட்ச ரூபாய் மதிப்பில் புதிய காவிரி குடிநீர் திட்டப் பணி துவங்கியது. பிறகு, திட்ட மதிப்பு, 70 கோடி ரூபாயை தாண்டியது. பழைய கரூர் மற்றும் தான்தோன்றிமலையில், புதிய குடிநீர் திட்டப் பணி நிறைவு பெற்றுள்ளது. பழைய இனாம் கரூர் பகுதிகளில், குடிநீர் திட்டப்பணி இழுபறியாக உள்ளது. இதனால், பல லட்ச ரூபாய் மதிப்பில் வாங்கப்பட்ட ராட்சத குடிநீர் குழாய்கள், கரூரில் பல இடங்களில் கேட்பாரற்று சாலையில் கிடக்கின்றன. குறிப்பாக, கோவை சாலை உள்ளிட்ட இடங்களில், பிளாட்பாரங்களில் குழாய்கள் போடப்பட்டுள்ளன. இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குடிநீர் குழாய்கள் சேதம் அடைந்து வருகின்றன. எனவே, குழாய்களை, பாதுகாப்பான இடத்தில் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X