தடுப்பணை சாலை சேதம்; பொதுமக்கள் அவதி

Added : ஜூலை 26, 2020
Share
Advertisement

கரூர்: செட்டிப்பாளையம் தடுப்பணைக்கு செல்லும் சாலை, பல மாதங்களாக குண்டும், குழியுமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். கரூர் அருகே செட்டிப்பாளையம் பகுதியில், அமராவதி ஆற்றின் குறுக்கே, தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. அதன் மூலம், 2,200 ?ஹக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் உள்ள அமராவதி அணையில் இருந்து, ஆற்றில் திறந்து விடப்படும் தண்ணீர், செட்டிப்பாளையம் அணையில் தேக்கி வைக்கப்படுகிறது. அப்போது, கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து செட்டிப்பாளையம் தடுப்பணைக்கு மக்கள் செல்கின்றனர். இந்நிலையில், செட்டிப்பாளையம் அணைக்கு செல்லும் சாலை, பல ஆண்டுகளாக குண்டும், குழியுமாக உள்ளது. குறிப்பாக, கருப்பம்பாளையம் பகுதியில், போக்குவரத்துக்கு பயனற்ற நிலையில் சாலை உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். அப்பகுதியில், போதிய தெரு விளக்குகள் இல்லாததால், இரவு நேரத்தில், குண்டும், குழியுமான சாலையில் செல்லும் மக்கள் தவறி விழுகின்றனர். எனவே, செட்டிப்பாளையம் தடுப்பணைக்கு செல்லும் தார்ச்சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X