உங்களை நிதியமைச்சர் ஆக்கிடலாமா...

Updated : ஜூலை 26, 2020 | Added : ஜூலை 26, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
நிதியமைச்சர்,சுப்ரமணிய சுவாமி, உதயநிதி, உதயநிதி ஸ்டாலின், பினராயி விஜயன் , கருப்பணன், பாலகிருஷ்ணன், வைகோ , ஆர்.எஸ்.பாரதி , ராஜேந்திர பாலாஜி , அழகிரி, வைகைச்செல்வன்

'உங்களை மத்திய நிதியமைச்சராக நியமித்து விடுவோமா...' என, கிண்டலாக கேட்கத் துாண்டும் வகையில், பா.ஜ., - எம்.பி., சுப்ரமணிய சுவாமி பேச்சு:

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, நாட்டின் பொருளாதார வளர்ச்சி சரியும். நடப்பு நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, மைனஸ் 6 முதல், 9 சதவீதம் வரை இருக்கும் என எதிர்பார்க்கிறேன். எனினும், தொழிலாளர்கள் பணிக்குத் திரும்பிவிட்டால், அடுத்த நிதியாண்டில், நாட்டின் பொருளாதாரம், 7 சதவீதம் வளர்ச்சி அடைய வாய்ப்புள்ளது. அதற்கு, கடந்த ஐந்தாண்டுகளாக பின்பற்றிய கொள்கைகளைப் பின்பற்றக்கூடாது.

'நம், 'டவுட் தனபாலு' தாக்கம், உதயநிதிக்கு வந்து விட்டதோ... என, ஆச்சரியத்தை வெளிப்படுத்தும் வகையில், தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதி ஸ்டாலின் அறிக்கை:

எம்.ஜி.ஆர்., சிலைக்கு காவி துண்டு அணிவிக்கப்பட்டதை, துணை முதல்வர் பன்னீர்செல்வம் கண்டிக்கிறார். என்ன ஆச்சரியம்; இதெல்லாம், அவரின் ஓனருக்கு தெரியுமா என்பது தான் என் டவுட்!

'அங்கே, உங்களுக்கு, காங்., - பா.ஜ., ஆதரவு ஊடகங்கள் குடைச்சல் கொடுக்கின்றன; இங்கே, தி.மு.க., தலைமையிலான எதிர்க்கட்சிகள், அரசுக்கு கண்டனம் தெரிவிக்கின்றன...' என, கூறத் துாண்டும் வகையில், கேரள முதல்வர் பினராயி விஜயன் பேட்டி:

கொரோனா செய்திகளை மக்களுக்கு கொண்டு செல்லத் தான் வேண்டும். ஆனால், அதை அரசுக்கு எதிரான ஆயுதமாக பயன்படுத்தி, தவறாக செய்திகளை வெளியிடக் கூடாது. இதனால் இரவு, பகலாக பணியாற்றும் சுகாதார பணியாளர்களுக்கு மனச்சோர்வை ஏற்படுத்தக் கூடாது.

'கொரோனா முடியும் வரை, ஸ்டாலினே முதல்வராக இருங்கள் என, ஆட்சியை கொடுத்து பாருங்கள்; தலை தெறிக்க ஓடுவார்...' என, கிண்டலாக கூறத் தோன்றும் வகையில், தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் பேச்சு:

கொரோனாவை ஒழிக்க, முதல்வர் இ.பி.எஸ்., இரவு, பகலாக பாடுபடுகிறார். அதனால் அவருக்கு, மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள நல்ல பெயரை கெடுக்க, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், பொய் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்.

'முதலில் கொரோனா முடியட்டும்; அதன்பின், அவசர சட்டம் பிறப்பிக்கட்டும்...' என, சொல்லத் தோன்றும் வகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலர் பாலகிருஷ்ணன் அறிக்கை:

தமிழகத்தில், தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு, மருத்துவ இளநிலை படிப்பில், 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்க, தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அது தொடர்பாக, கவர்னர் உடனடியாக அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும்.

'இந்த அறிக்கையை நீங்கள் தான் தயாரித்துள்ளீர்கள் என்பதை பாமரரும் அறியும் வகையில், 'பஞ்சை, பராரி' போன்ற, உங்களின் டிரேட் மார்க் வார்த்தைகள் உள்ளன... என, கிண்டல் செய்யத் தோன்றும் வகையில், ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ அறிக்கை:


latest tamil news




மத்திய அரசு கொண்டு வந்துள்ள மின்சார சட்டத்திருத்தம், வேளாண் விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தகம் அவசரச் சட்டம் ஆகியவை, விவசாயிகளுக்கு பெரும் அநீதி இழைப்பவை. இந்த சட்டங்களால், விவசாயிகள், நிலங்களை விட்டு வெளியேறி, சொந்த மண்ணிலேயே, பஞ்சை பராரிகளாக அலையும் நிலையை உருவாக்கி விடும்.

'தி.மு.க., அடிக்கடி பிரச்னைகளை பேசினாலும், சில சமயங்களில், நியாயமாகத் தான் கேள்வி கேட்கிறது...' என, கூறத் துாண்டும் வகையில், தி.மு.க., அமைப்புச் செயலர், ஆர்.எஸ்.பாரதி அறிக்கை:

தமிழகத்தில் கொரோனா பாதித்து இறந்த, 444 பேரின் மரணத்தை மறைத்த, தமிழக அரசு, அவர்களின் உடல்களை எப்படி அடக்கம் செய்தது என்பதை விளக்க வேண்டும். அந்த மரணங்களுக்கு, முதல்வரும், அமைச்சரும் பொறுப்பேற்க வேண்டும்.

'பால் விவசாயிக்கே, அந்த பாலை கொட்டுகிறோமே என வருத்தம் தோணவில்லை; அமைச்சரான உங்களுக்கு தோன்றுகிறது...' என, சொல்லத் துாண்டும் வகையில், தமிழக பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச்சு:

பால் கொள்முதல் விலையை அதிகம் கோரி, போராட்டம் நடத்திய பால் விவசாயிகள், பாலை கொட்டி வீணாக்கியுள்ளனர். விளம்பரத்திற்காக இந்த செயலை செய்யும் அவர்கள், 'சேடிஸ்ட்' மனப்பான்மை கொண்டவர்கள்.

'நீங்கள் சொன்னாலும், சொல்லாவிட்டாலும், தமிழக மக்களை காக்கும் பொறுப்பு, காங்கிரசுக்கு இல்லை; தமிழக அரசுக்குத் தான் உள்ளது...' என, நெத்தியடியாக கூறத் துாண்டும் வகையில், தமிழக காங்., தலைவர் அழகிரி அறிக்கை:

தமிழகத்தில் கொரோனா சமூக பரவல் இல்லை எனக் கூறி, நம்மை நாமே ஏமாற்றி கொள்ளக் கூடாது. தற்போது, சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை குறைந்திருந்தாலும், மற்ற மாவட்டங்களில் எண்ணிக்கை கடுமையாக கூடி வருகிறது. சமூக பரவலில் இருந்து, கிராம மக்களை காப்பாற்ற வேண்டும்.

அ.தி.மு.க., செய்தித் தொடர்பாளர் வைகைச்செல்வன் அறிக்கை:

கருப்பர் கூட்டத்திற்கும், தனக்கும் சம்பந்தம் இல்லை என, தி.மு.க., சொல்லி இருக்கிறது. அதன் வாயிலாக, கந்த கஷ்டி கவசத்தை புண்படுத்தியது தவறு என, ஒரு விளக்கத்தையும் அக்கட்சி தந்து விட்டது. கடவுள் மறுப்பாளர் கொள்கையை பின்பற்றும், தி.மு.க.,வின் நிலைப்பாடு என்ன என்பதையும், தன் இரட்டை வேடத்தனத்தையும், பல்வேறு தருணங்களில் மக்கள் பார்த்திருக்கின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வெகுளி - Maatuthaavani,இந்தியா
26-ஜூலை-202016:56:11 IST Report Abuse
வெகுளி பொருளாதாரத்தை பொறுத்தவரை டாக்டர் சுப்பிரமணிய சுவாமி ஒரு ராஜகுரூ ....... அது அமைச்சர் பதவியை விட உயர்வானது..... நிதியமைச்சருக்கு தேவையான ஆலோசனைகளை டாக்டர் சுப்பிரமணிய சுவாமி வழங்கினால் நல்லது....
Rate this:
Cancel
26-ஜூலை-202012:23:25 IST Report Abuse
ஆரூர் ரங் சிலர் போராட்டம் நடத்ததான் லாயக்கு. ஆளுமைத்திறனோ மற்றவறோடு இசைந்து ஒத்துப்போய் ஒன்றிணைந்து பணிசெய்யவோ வராது.
Rate this:
Cancel
SAPERE AUDE -  ( Posted via: Dinamalar Android App )
26-ஜூலை-202010:53:10 IST Report Abuse
SAPERE AUDE பா ஜ பா MP டாக்டர் சுப்பிரமணிய சுவாமி, பொருளாதாரத்தில் நிபுணர்.ஆனால் அவர் தனிமையாக சிந்திப்பவர். ஒரு மந்திரி சபையில் கூட்டாக இருந்து ஓர் பிரதமருக்கு உதவியாக இருந்து பணிசெய்வது அவரால் இயலுமா என்பது சந்தேகமே !
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X