பயண செலவை சோனியா ஏற்பதாக சொன்னது என்னாச்சு?: ராகுலுக்கு பியூஷ் கோயல் பதிலடி

Updated : ஜூலை 26, 2020 | Added : ஜூலை 26, 2020 | கருத்துகள் (18)
Share
Advertisement
Rahul, Piyush Goyal, Railway, Sonia, sonia gandhi, Goyal, Rahul Gandhi, Shramik trains, tweet,பியூஷ்கோயல், ராகுல், ரயில்வே, சிறப்பு ரயில், ஷ்ராமிக், சோனியா

புதுடில்லி: புலம்பெயர் தொழிலாளர்களுக்காக இயக்கப்பட்ட ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் மூலம் ரூ.429.9 கோடி வருவாய் கிடைத்ததாக அறிவித்த ரயில்வேத்துறையை காங்., எம்பி., ராகுல் விமர்சித்திருந்தார். இதற்கு, ரயில்வேத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் பதிலடி கொடுத்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் அனைத்து போக்குவரத்தும் நிறுத்தப்பட்டன. இதனால் வெளிமாநிலங்களில் வேலைசெய்து வந்த புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்து வந்தனர். இதையடுத்து புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர் திரும்புவதற்காக ஷ்ராமிக் சிறப்பு ரயில்களை மத்திய அரசு இயக்கி வருகிறது. இந்த சிறப்பு ரயில்கள் மூலமாக கடந்த ஜூலை 9ம் தேதி வரை ரூ.429.90 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.


latest tamil news


இது குறித்து காங்., எம்பி., ராகுல், கொரோனா போன்ற இக்கட்டான நேரத்தில் கூட ஏழை எளிய மக்களை வைத்து மத்திய அரசு வருவாய் ஈட்டிக் கொண்டிருப்பதாக, குற்றம் சாட்டினார்.

ராகுலின் டுவிட்டர் பதிவுக்கு மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் பதிலடி கொடுத்துள்ளார்.

அவரது டுவிட்: இந்தியாவையே சுரண்டிக் கொண்டிருந்தவர்கள்தான் இப்போது அரசு வழங்கும் மானியத்தை வருமானம் ஈட்டுவதாக விமர்சிக்கிறது. ஷ்ராமிக் ரயில்களை இயக்குவதற்காக மத்திய அரசு அதிகளவில் செலவு செய்து வருகிறது. புலம்பெயர் தொழிலாளர்களின் ரயில் பயணத்துக்கான செலவுகளை சோனியா ஏற்பதாகக் கூறினாரே அது என்ன ஆச்சு என்று மக்கள் இப்போது கேட்டுக்கொண்டிருக்கின்றனர். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
madhavan rajan - trichy,இந்தியா
30-ஜூலை-202020:20:14 IST Report Abuse
madhavan rajan காங்கிரஸ் என்னிக்கி சொன்னதை செய்திருக்கு. ஏழையை ஒழிப்போம் என்று கூச்சலிட்டு அந்த கட்சியின் தலைவர்களெல்லாம் கோடீஸ்வரர்களாளி பல வெளிநாடுகளில் சொத்து வாங்கியதுதான் சாதனை. இதைவிட பெரிதாக ஏழ்மையை ஒழித்துவிட முடியுமா. ரீசண்டாக சோனியாவின் மாப்பிள்ளை வாத்ராவின் ஏழ்மையை கடந்த பதினைந்து ஆண்டுகளில் ஒழித்து சாதனை புரிந்திருக்கிறார்கள். அவர் மக்கள் ஆட்டோ, இரு சக்கர வாகனத்தையெல்லாம் பஸ் என்று உ பி முதல்வரை அனுமதி கொடுக்கவில்லை என்று மிரட்டுகிறார். வந்தே மாதரம்.
Rate this:
Cancel
Darmavan - Chennai,இந்தியா
27-ஜூலை-202019:13:42 IST Report Abuse
Darmavan சோனியா சொல்வதெல்லாம் ஒரு ஸ்டண்ட் .இதை மெதுவாக சொல்வதை விட பெரிய செய்தியாக ஆக்க வேண்டும்.
Rate this:
Cancel
mathimandhiri - chennai,இந்தியா
26-ஜூலை-202017:22:26 IST Report Abuse
mathimandhiri ippothu
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X