அரசியல் செய்தி

தமிழ்நாடு

ரேஷன் கடைகளில் இலவச மாஸ்க்: முதல்வர் நாளை தொடங்கி வைக்கிறார்

Updated : ஜூலை 26, 2020 | Added : ஜூலை 26, 2020 | கருத்துகள் (13)
Share
Advertisement
ரேஷன்கடை, முகக்கவசம், முதல்வர், தொடங்கி வைக்கிறார், இலவசம், மாஸ்க், Free face masks, ration card holders, Tamil Nadu govt, Covid-19 in tn, corona, coronavirus, covid-19, corona deaths, corona update, coronavirus update, coronavirus corona cases in TN, corona crisis, covid 19 pandemic, tamil nadu,

சென்னை: ரேஷன் கடைகளில் இலவச மாஸ்க் வழங்கும் திட்டத்தை முதல்வர் இபிஎஸ் நாளை (ஜூலை 27) தொடங்கி வைக்கிறார்.

கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில், தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகள் மூலம், இலவசமாக மாஸ்க் வழங்கும் திட்டத்தை முதல்வர் இபிஎஸ் சமீபத்தில் அறிவித்தார்.

தமிழகத்தில் குடும்ப அட்டைகளில் 6 கோடியே 74 லட்சத்து 15 ஆயிரத்து 899 பெயர்கள் உள்ளன. அவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா இரண்டு மாஸ்க் என்கிற கணக்கில் மொத்தம் 13 கோடியே 48 லட்சத்து 31 ஆயிரத்து 798 மறு பயன்பாட்டுத் துணி மாஸ்க்குகள் வழங்கப்பட உள்ளன.


latest tamil news


காட்டன் துணியால் தயாரிக்கப்பட்டுள்ள மாஸ்க் தலையின் பின்புறம் கட்டிக் கொள்வது போல வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த முகக் கவசத்தைத் துவைத்து மீண்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். சென்னை மாநகராட்சி தவிர மற்ற பகுதிகளில் வழங்க முதல்கட்டமாக 4 கோடி முகக்கவசங்கள் தயாராக உள்ளன. மீதமுள்ள 7 கோடி முகக் கவசங்களைத் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

அனைத்து ரேஷன் கடைகளிலும் இந்த இலவச முகக்கவசம் வழங்கும் திட்டத்தை முதல்வர் இபிஎஸ் நாளை (ஜூலை 27) தொடங்கி வைக்கிறார்.

Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R.Kumaresan - T.Rajagopalanpatti,இந்தியா
26-ஜூலை-202020:27:09 IST Report Abuse
R.Kumaresan R.Kumaresan. வைரஸ் வைரஸ் நோய் பரவல், ஊரடங்கு உத்தரவு..R.Kumaresan. இந்தியா, தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் இலவச ஜீனி, பருப்பு அரிசியையே சரியா டோக்கன் குடுத்து குடுக்காம சரியா போடுரதில்லை இதில மூஞ்சியை மூடுறதுக்கு ரேஷன் கடையிலிருந்து தர்றதா சொல்றாங்க சரியா தரவே மாட்டாங்க ரேஷன்கார்டுதாரர்களுக்கு தலா ரூ1000 கொடுத்து ரேஷன் அரிசி, ஜீனி பருப்பு இலவசமா கொடுத்தாமாதிரி கொடுத்தா ஏதோ பரவாயில்லை ஏதோ சரியா கொடுத்திருவாங்க..R.Kumaresan.
Rate this:
Cancel
26-ஜூலை-202020:06:20 IST Report Abuse
தமிழ் ஒரு பேப்பர் துண்டில் ரெண்டு நூல் கட்டிட்டு இதுதான் தரமான மாஸ்க் அப்படின்னு சொல்லாம இருந்தால் சரி.
Rate this:
Cancel
Rajen - Chennai,இந்தியா
26-ஜூலை-202020:04:40 IST Report Abuse
Rajen This is not good for Tamil Nadu government. After 5 months now planning to give two pieces of face mask. Also chief minister conduct the ing ceremony for face mask distribution. Too late. Poor management.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X