பொது செய்தி

இந்தியா

நாட்டிற்கு எதிரான விஷயங்களை பரப்பக்கூடாது: பிரதமர் மோடி

Updated : ஜூலை 26, 2020 | Added : ஜூலை 26, 2020 | கருத்துகள் (17)
Share
Advertisement
Pm Modi, Maan ki baat, Modi, Narendra modi, Pm Narendra modi, PMO india, Kargil, corona, coronavirus, covid19, mask, india, மன்கிபாத், மனதின்குரல், பிரதமர்மோடி, மோடி, நரேந்திரமோடி, பிரதமர்நரேந்திரமோடி, கொரோனா, கார்கில், கோவிட்19, கொரோனாவைரஸ்,

புதுடில்லி: நாட்டின் நலனுக்கு எதிரான விஷயங்களை சமூக வலைதளங்களில் பரப்பும் தவறை செய்யக்கூடாது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

'மன் கி பாத்' நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி பேசியதாவது: கார்கில் போரில் உயிர் நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன். கார்கில் போரில் வெற்றிக்காக இன்னுயிர் நீத்த வீரர்களுக்கு சமூக வலைதளங்களிலும் மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

21 ஆண்டுகளுக்கு முன்னர், இதே நாளில், நமது ராணுவம் கார்கில் போரில் வெற்றி பெற்றது. அப்போது பாகிஸ்தானுடன் நல்லுறவையே இந்தியா விரும்பியது. ஆனால், எந்தவித காரணமும் இல்லாமல் அனைத்து தரப்பினருடனும் பகையை வைத்திருக்கவே அந்நாடு விரும்பியது.


latest tamil newsஒட்டு மொத்த உலகமுமே, இந்திய வீரர்களின் திறமையையும், வீரத்தையும் பார்த்தது. கார்கில் போரில் உயிர் துறந்த வீரர்களுக்கும் எனது அஞ்சலியை செலுத்துகிறேன். நம் ஒவ்வொரு வார்த்தையும், செயலும் ராணுவ வீரர்களுக்கு மன உறுதியை அளிக்கக்கூடியதாக இருக்க வேண்டும்.

இந்தியாவின் நிலத்தை பிடிக்கவும், உள்நாட்டு குழப்பத்திலிருந்து திசைதிருப்பவும், மோசமான திட்டங்களுடன் பாகிஸ்தான் கார்கில் போரை துவக்கியது. நாட்டிற்கு எதிரான விஷயங்களை, சமூக வலைதளங்களில் பரப்பும் தவறை செய்யக்கூடாது.

நாடு ஒற்றுமையாக இருக்க அனைத்தையும் செய்வோம்.ஆக., 7 ல் தேசிய கைத்தறி நாள் கடைபிடிக்கப்படுகிறது. அனைவரும் கைத்தறி பொருட்களை பயன்படுத்த வேண்டும். அசாம், பீஹார் மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால், அவதிப்படும் மக்களுக்கு ஆதரவாக நாடே ஒன்றுபட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் இன்னும் முடியவில்லை. நாம் அதிக முன்னெச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்.இதனால், கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு நாம் கூடுதல் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் விகிதம், மற்ற நாடுகளை காட்டிலும், இந்தியாவில் சிறப்பாக உள்ளது. மற்ற நாடுகளை காட்டிலும் இறப்பு விகிதமும் குறைவாக உள்ளது.

கொரோனா நோய் பரவாமல் தொடக்கத்தில் எந்தளவுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றினோமா அதை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும். கொரோனாவுக்கு எதிரான போர் இன்னும் முடியாததால், மக்கள் எப்போதும் மாஸ்க் அணிய வேண்டும். அசவுகரியமாக இருந்தாலும், கொரோனாவை தடுக்க மாஸ்க் அவசியம். மாஸ்க் அணிவதை கட்டாயமாக்கி கொள்ள வேண்டும். மாஸ்கை அகற்ற வேண்டும் என தோன்றினால், நமது டாக்டர்கள், நர்சுகள் நினைத்து பார்க்க வேண்டும் நம்மை காப்பாற்ற சுகாதார பணியாளர்கள் பல மணி நேரம் மாஸ்க் அணிந்து பணியாற்றுகின்றனர்.

மாஸ்க் அணிவது, 6 அடி இடைவெளி கடைபிடிப்பது உள்ளிட்டவற்றை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும். கைகளை அடிக்கடி கழுவ வேண்டும். பொது இடங்களில் எச்சில் துப்பகூடாது. சுதந்திர தினத்தன்று கொரோனா நோய் தொற்றிலிருந்து விடுபடுவோம் என உறுதியேற்று கொள்வோம்.

நாம் லட்சக்கணக்கான மக்களை காப்பாற்றியிருந்தாலும், கொரோனா அச்சுறுத்தல் முடியவில்லை. பல பகுதிகளுக்கும் வேகமாக பரவுகிறது. இதனால், நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். பருவமழை காலத்தை கருத்தில் கொண்டு, பிற நோய்களிலிருந்து விலகி நிற்போம். இவ்வாறு அவர் கூறினார்.


நாமக்கல் மாணவியுடன் கலந்துரையாடல்


மன் கி பாத் நிகழ்ச்சியில், பொதுத்தேர்வில் சாதனைபடைத்த மாணவர்களுடனும் கலந்துரையாடியதை பிரதமர் விளக்கினார். அப்போது, தமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த கன்னிகாவுடனும் அவர் தொலைபேசியில் கலந்துரையாடினார்.

அப்போது பிரதமர் மோடி, நாமக்கல் என்றால் ஆஞ்சநேயர் கோயில் நினைவுக்கு வரும். இனிமேல் கன்னிகா நினைவுக்கு வருவார் என தெரிவித்தார்.

இது தொடர்பாக கன்னிகா கூறுகையில், பிரதமர் மோடி தன்னுடைய கலந்தரையாடியது மிகவும் பெருமையாக கருதுகிறேன். லாரி ஓட்டுநரான தனது தந்தை நன்கு படிக்க வைத்ததால்தான் சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற முடிந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
27-ஜூலை-202005:36:11 IST Report Abuse
meenakshisundaram ஐயோ அப்ப எங்க பிழைப்பு என்னாவுது?திமுக மற்றும் ராகுல் ?
Rate this:
Cancel
26-ஜூலை-202020:16:08 IST Report Abuse
ஆப்பு வருஷம் இரண்டு கோடி பேருக்கு ஏன் வேலைவாய்ப்பு குடுக்கலைன்னு கேட்டா தப்பா?
Rate this:
Ram Kannan - California,யூ.எஸ்.ஏ
27-ஜூலை-202001:18:23 IST Report Abuse
Ram KannanAnti-Indian Lol...
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
26-ஜூலை-202017:20:54 IST Report Abuse
Endrum Indian நாட்டிற்கு எதிரான விஷயங்களை பரப்பக்கூடாது என்று சொல்லாதீர்கள். பரப்பினால் "கண்டேன் சுட்டேன்" என்ற சட்டம் உடனே கொண்டு வாருங்கள் அப்புறம் யார் பரப்புவார்கள் பார்க்கலாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X