கொரோனா குறித்து கேலி செய்யாமல் இருந்திருக்கலாம்: கமல்நாத் அறிவுரை

Updated : ஜூலை 26, 2020 | Added : ஜூலை 26, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
Kamal nath, Shivraj Singh, Corona Positive, Joke, Madhya Pradesh, tests positive, Coronavirus, Corona, Covid-19, மத்திய பிரதேசம், கமல்நாத், சிவராஜ்சிங், கொரோனா, கேலி

போபால்: ‛மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், கொரோனா குறித்து கேலி செய்யாமல் கவனத்துடன் இருந்திருக்கலாம்,' என முன்னாள் முதல்வர் கமல்நாத் தெரிவித்துள்ளார்.

மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ம.பி., முன்னாள் முதல்வர் கமல்நாத் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது:
நீங்கள் (சிவராஜ் சிங் சவுகான்) கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதை அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். நீங்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். கொரோனா பரவல் தீவிரமாக இருந்தபோது சிலசமயம் அது ஒரு நாடகம் என்றும், கொரோனா குறித்து அச்சப்படத் தேவையில்லை எனவும், சக்தியை காப்பாற்றும் ஆயுதம் எனவும் கூறினீர்கள்.


latest tamil news



இது உயிர்க்கொல்லி நோய் என்றும் அனைவரும் நெறிமுறைகளை பின்பற்றி கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என நாங்கள் ஆரம்பம் முதல் கூறி வருகிறோம். ஒருவேளை நீங்கள் கொரோனா குறித்து கேலி செய்யாமல் இருந்திருந்தால், கொரோனாவால் பாதிக்கப்படாமல் இருந்திருக்கலாம். பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி, கூடுதல் பாதுகாப்பாக இருக்கலாம். நீங்கள் விரைவில் குணமடைந்து பணிக்கு திரும்ப வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balasubramanian Ramanathan - vadakupatti,இந்தியா
26-ஜூலை-202014:20:55 IST Report Abuse
Balasubramanian Ramanathan உலக சுகாதார கழகத்துக்கு கூடத்தான் நம்ம ராகுல் எடுத்து சொன்னார், இது பயங்கர தொற்று. வேண்டாம் அழிஞ்சிடுவீங்கன்னு. யாரு கேட்டா ? மொத்தத்துல எல்லாம் அறிவீலிகள். விடுங்க ஐயா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X