பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா பாதிப்பு நிலவரம்: நெல்லையில் 16 நர்சுகளுக்கு கொரோனா

Updated : ஜூலை 26, 2020 | Added : ஜூலை 26, 2020
Share
Advertisement
நெல்லை, திருநெல்வேலி, கொரோனா, கொரோனாவைரஸ், கோவிட்19, நர்சுகள், tirunelveli, tests positive, Covid-19 in tn, corona, coronavirus, covid-19, corona deaths, corona update, coronavirus update, corona cases in TN, corona crisis, covid 19 pandemic, tamil nadu,

திருநெல்வேலி : திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று 16 செவிலியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது.

இவர்கள் கொரோனா வார்டில் கடந்த வாரம் பணியாற்றி விட்டு ஒரு வாரம் தனியார் விடுதியில் ஓய்வில் இருந்தவர்கள். நெல்லையில் ஏற்கனவே 3 செவிலியர்கள், மூன்று செவிலியர் உதவியாளர்கள் என ஆறு பேருக்கு நோய்த்தொற்று உறுதியாக இருந்த நிலையில் தற்போது மேலும் 16 செவிலியர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் டாக்டர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு உபகரணங்கள், N95 முக கவசம், வார்டில் அணியும் செருப்பு போன்றவை செவிலியர்களுக்கு வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.


latest tamil news




இதனிடையே நெல்லையில் மேலும் 190 பேருக்கு கொரோனா உறுதியானது. மாநகர பகுதியில் 85 பேருக்கும், ராதாபுரத்தில் 37 பேருக்கும், பாளையங்கோட்டை புறநகரில் 21 பேருக்கும் உறுதியாகியுள்ளது. இதனால் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு 3,785 ஆனது.

மதுரையில் கடந்த 24 மணி நேரத்தில் மதுரையில் மேலும் 195 பேருக்கு கொரோனா உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,790 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 202 பேர் உயிரிழந்துள்ளனர்.

தேனியில் மேலும் 233 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால், பாதிப்பு, 3,789 ஆனது. இதுவரை 1,940 பேர் குணமடைந்துள்ளனர். 1,803 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வேலூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 204 பேருக்கு கொரோனா உறுதியானதால், மொத்த பாதிப்பு 5,156 ஆனது. 42 பேர் உயிரிழந்துள்ளனர்.

விருதுநகரில் 460 பேருக்கு கொரோனா உறுதியானதால், மொத்த பாதிப்பு 6,033 ஆக அதிகரித்துள்ளது.

காஞ்சிபுரத்தில் மேலும் 347 பேருக்கு கொரோனா உறுதியானதால், மொத்த பாதிப்பு 7,143 ஆக அதிகரித்துள்ளது.

திருவள்ளூர் 475 பேருக்கு தொற்று உறுதியானதால், பாதிப்பு 11,870 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக மீஞ்சூரில் 92, பூந்தமல்லியில் 70, பொன்னேரி, ஆர்கே பேட்டையில் தலா 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

செங்கல்பட்டில் ஒரே நாளில் 508 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், பாதிப்பு எண்ணிக்கை, 12,272 ஆக அதிகரித்துள்ளது

தர்மபுரியில் மேலும் 130 பேருக்கு கொரோனா உறுதியானதால், மொத்த பாதிப்பு 700 ஆனது

திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் 176 பேருக்கு கொரோனா உறுதியானதால் மொத்த பாதிப்பு 5,085 ஆக உயர்ந்தது. 3,212 பேர் குணமடைந்தனர். 48 பேர் உயிரிழந்துள்ளனர்.

கிருஷ்ணகிரியில் மேலும் 52 பேருக்கு கொரோனா உறுதிபடுத்தப்பட்டதால், மொத்த பாதிப்பு 727 ஆனது.


20 பேர் பலி



சென்னையில், கொரோனா காரணமாக மேலும் 20 பேர் உயிரிழந்துள்ளனர். அரசு மருத்துவமனையில் 4 பேர், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 3 பேர், ஆயிரம் விளக்கு தனியார் மருத்துவமனையில் 2 பேர், நந்தம்பாக்கம், அடையாறு, சேத்துப்பட்டில் ஆகிய பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் தலா ஒருவர் என 20 பேர் உயரிழந்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X