ஜனநாயகத்துக்காக குரல் கொடுங்கள் - வீடியோ மூலம் வலியுறுத்தும் ராகுல்!

Updated : ஜூலை 26, 2020 | Added : ஜூலை 26, 2020 | கருத்துகள் (42)
Share
Advertisement
Congress, Rahul, Rahul Gandhi, democracy, digital campaign, bjp, காங்கிரஸ்,ராகுல்,ராகுல் காந்தி

புதுடில்லி: ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக சச்சின் பைலட் தலைமையிலான காங்கிரஸ் எம்.எல்.ஏக்களே திரும்பியுள்ள நிலையில், பா.ஜ.க அரசியலமைப்பை சிதைத்து, ஜனநாயகத்தை அழிப்பதாக ராகுல் வீடியோ வெளியிட்டுள்ளார்.

டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறப்பட்டுள்ளதாவது: இன்று ஒட்டுமொத்த நாடும் கொரோனா வைரசுக்கு எதிராக போராடி வரும் வேளையில் பா.ஜ., அரசியலமைப்பை சிதைத்து, ஜனநாயகத்தை அழிக்கும் செயலில் இறங்கியுள்ளது. 2018-ல் ராஜஸ்தான் மக்களால் வாக்களித்து தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் அரசை, சதி செய்து கவிழ்க்கும் முயற்சியில் பா.ஜ., இறங்கியுள்ளது.


latest tamil news



மத்திய பிரதேசத்தில் செய்ததை போல், தற்போது ராஜஸ்தானிலும் ஜனநாயக படுகொலையை அரங்கேற்றுகிறது. ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களை கவிழ்ப்பதை பா.ஜ., நிறுத்திக்கொள்ள வேண்டும். எங்கள் அரசியலமைப்பு உரிமைகளை மதித்து உடனடியாக சட்டசபையை கூட்ட வேண்டும் என கோருகிறோம். எங்களுடன் இணைந்து ஜனநாயகத்துக்காக குரல் கொடுங்கள். இவ்வாறு அந்த வீடியோவில் கூறப்பட்டுள்ளது.

ஆனால் ராஜஸ்தானில் ஆட்சி கவிழ்ப்பு நடவடிக்கையில் பா.ஜ.,வின் பங்கு இருப்பதாக இதுவரை எந்த ஆதாரத்தையும் கெலாட் வெளியிடவில்லை. சச்சின் பைலட்டிற்கு கட்சியிலும், ஆட்சியிலும் உரிய அங்கீகாரம் தராமல் ஓரம்கட்டியதால் இப்பிரச்னை எழுந்துள்ளது. இது காங்.,க்கும் காங்.,க்கும் இடையே நடக்கும் பிரச்னை இதில் ஜனநாயக படுகொலையை பா.ஜ., எங்கே நிகழ்த்தியது என அக்கட்சியினர் கேள்வி எழுப்புகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (42)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - new jersy,யூ.எஸ்.ஏ
26-ஜூலை-202023:16:20 IST Report Abuse
sankar சீன ஆளுகைக்கு இந்தியாவில் மரியாதையை கிடைக்காது . உங்க குடும்பத்தை மக்கள் வெறுத்து பல காலம் ஆகி விட்டது
Rate this:
Cancel
GMM - KA,இந்தியா
26-ஜூலை-202021:20:24 IST Report Abuse
GMM ஜனநாயகத்திற்கு குரல் கொடுங்கள் கம்யூனிஸ்ட் சீனர்கள் . ராகுல் குரல் கேட்கிறதா ? உங்களுக்கு சாதகம் எனில் சட்டம் வென்றது . பாதகம் எனில் குரல் கொடுங்கள் . கட்ட பஞ்சாயத்து சட்டங்கள் பல இயற்றியது காங்கிரஸ். அரசியல் சூதாடிகள் , சட்டத்தை முதலில் திருத்துங்கள் .
Rate this:
Cancel
NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா
26-ஜூலை-202021:07:33 IST Report Abuse
NicoleThomson பேசாமல் போ
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X