சிறப்பு பகுதிகள்

கந்தனுக்கு அரோஹரா

கந்த சஷ்டி கவசத்துக்கு வரம்பு மீறிய விமர்சனம்: திருப்பூரில் இஸ்லாமியர் கண்டனம்

Added : ஜூலை 26, 2020
Share
Advertisement
 கந்த சஷ்டி கவசத்துக்கு வரம்பு மீறிய விமர்சனம்:  திருப்பூரில் இஸ்லாமியர் கண்டனம்


திருப்பூர் : ''கந்த சஷ்டி கவசத்தை கொச்சைப்படுத்தி வரம்பு மீறிய விமர்சனம் ஏற்புடையதல்ல'' என்று ஓய்வு பெற்ற டாக்டர் நசீர் தெரிவித்துள்ளார்.

கந்த சஷ்டி கவத்தை 'கருப்பர் கூட்டம்' என்ற 'யூ டியூப்' சேனலில் விமர்சனம் என்ற பெயரில் கொச்சைப்படுத்தி பேசியிருந்தனர். தமிழகம் முழுவதும் எதிர்ப்பு எழுந்தது. நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த சர்ச்சை குறித்து திருப்பூரை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு மருத்துவமனை டாக்டர் நசீர் கூறியதாவது:கந்த சஷ்டி கவசம் தொடர்பான கருப்பர் கூட்டத்தின் வரம்புமீறிய விமர்சனம் மிகவும் கண்டனத்துக்கு உரியது. பிரார்த்தனை வழிமுறையை தேர்வு செய்யும் தனிப்பட்ட உரிமையில் யாரும் தலையிடக்கூடாது.எவற்றையெல்லாம் பேசினால் மக்கள் மத்தியில் அன்பும் நன்மையும் விளையுமோ அவற்றை பேசுவதே அறிவுடைமை. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்று சொன்ன கணியன் பூங்குன்றனார். 'வியத்தலும் இலமே இகழ்தலும் இலமே' என்று சொல்லியதை கருத்தில் கொள்ள வேண்டும். புரட்சிகரமாக சிந்திப்பதாக எண்ணி கொண்டு புண்படுத்தும் வார்த்தைகளை அள்ளியிறைக்க கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X