சீனாவின் தொல்லைகளை சமாளிக்க இந்தியாவுடன் நெருங்கும் பூட்டான்

Updated : ஜூலை 26, 2020 | Added : ஜூலை 26, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
China, Bhutan, India, சீனா, பூடான், நிலப்பரப்பு, இந்தியா, நெருக்கம்

திம்பு: பூட்டானின் சக்தேங் வனவிலங்கு சரணாலயத்தின் 650 சதுர கிலோ மீட்டர் நிலபரப்பை சீனா புதிதாக சொந்தம் கொண்டாடுவதால், அதனை சமாளிக்க பூட்டான் இந்தியாவுடன் நெருக்கம் காட்டத் தொடங்கியுள்ளது.

பூட்டானுக்கும் சீனாவுக்கும் இடையே நீண்ட காலமாக எல்லைப் பிரச்னை உள்ளது. தங்கள் எல்லைப் பிரச்னையைத் தீர்ப்பதற்காக 1984-ம் ஆண்டு முதல் 24 சுற்று பேச்சுவார்த்தைகளை இரு நாடுகளும் நடத்தியுள்ளன. கடைசியாக 2016-ல் பேச்சுவார்த்தை நடைபெற்றது. பூட்டானின் மேற்கு செக்டாரில் 269 சதுர கி.மீ பரந்து விரிந்துள்ள டோக்லாம், சிஞ்சுலுங், டிராமனா மற்றும் ஷாகடோ பகுதிகளை சீனாவுக்கு உரிமையாக்கும் வகையில் ஒப்பந்தம் ஒன்றை தயாரித்து, அதனை ஏற்றுக்கொள்ளுமாறு பூட்டானுக்கு 20 ஆண்டுகளாக பீஜிங் அழுத்தம் கொடுத்து வருகிறது.


latest tamil news



சீனாவுடன் நீண்ட கால எல்லைப் பிரச்னை இருந்த போதும், இந்தியா - சீனா ஆகிய இரு அண்டை நாடுகளுடனும் சமமான உறவைப் பேண வேண்டும் என்ற கொள்கை கொண்டிருந்தது பூட்டான். இந்த நிலையில் தங்களின் சக்தேங் வனவிலங்கு சரணாலயத்திற்கு அமெரிக்காவைச் சேர்ந்த சுற்றுச்சூழல் தொண்டு நிறுவனம் மூலம் நிதி திரட்டும் பணியில் பூட்டான் இறங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சீனா, சக்தேங் சரணாலயத்தின் ஒரு பகுதி தங்களுக்கு சொந்தமானது என கூறி பூடானுக்கு அதிர்ச்சி கொடுத்தது. சீனாவின் இந்த நிலைப்பாட்டை பூட்டான் மிக கடுமையாக எதிர்த்துள்ளது.

சீனா எல்லை தொடர்பாக அளித்து வரும் தொல்லையால் தற்போது இரு நாடுகளுடன் சமமான உறவு என்ற பார்வையை பூடான் மாற்றிக் கொண்டுள்ளது. கடந்த ஒரு மாதமாக டில்லியுடன் பூடான் நெருக்கம் காட்டி வருவதாக, வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த சூழலை பயன்படுத்தி அசாமின் கவுகாத்தியிலிருந்து அருணாச்சலின் தவாங் இடையிலான 450 கி.மீ தூரத்தை கணிசமாக குறைக்கும் சாலையை பூட்டான் சரணாலயம் வழியாக அமைக்கும் திட்டத்தை இந்தியா முன் மொழிந்துள்ளது. இதனை பூட்டான் ஏற்றுக்கொள்ளும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா
27-ஜூலை-202017:45:04 IST Report Abuse
NicoleThomson பாவம் பூட்டானியர்கள்
Rate this:
Hari - chennai,இந்தியா
28-ஜூலை-202009:50:01 IST Report Abuse
Haribuththar pesuvaar ,aanaal............
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
26-ஜூலை-202021:49:27 IST Report Abuse
Lion Drsekar திரைப்பட இயக்குனர்கள் சீனா பற்றிய விழிப்புணர்வு இவ்வுலகத்துக்கு ஏற்படுத்த வேண்டும், பாகிஸ்தான் என்பது நமக்கும் மட்டுமே எதிரி ஆனால் சீனா உலக நாடுகள் அனைவரையும் விரோதித்துக்கொண்டு தன நாட்டின் எல்லையை விரிவு படுத்தும் போக்கில் நாளுக்கு நாள் உலக பொருளாதாரத்தையே சீரழித்துக்கொண்டு வருகிறது, இந்த நிலையில் தற்போதைய கல்வி முறை மற்றும் விஞ்ஞான வளர்ச்சியினால் இதுபோன்று அழிவுக்கு அதை பயன்படுத்தாமல் ஆக்கபூர்வமாக செயல்பட்டால் உலக மக்கள் அனைவரும் வாழும் இந்த பூமியைக் காப்பாற்றலாமே, திரையுலக பிரமுகர்கள் சிந்தித்தால் உலகுக்கு வழிபிறக்கும், வந்தே மாதரம்
Rate this:
Cancel
M.COM.N.K.K. - Vedaranyam ,இந்தியா
26-ஜூலை-202020:40:33 IST Report Abuse
M.COM.N.K.K. விரைவில் இலங்கையையும் எங்களுக்குத்தான் சொந்தம் என்று சீனாக்காரன் சொல்வதற்குள் சட்டுபுட்டுன்னு ராமேஸ்வரத்திலிருந்து கடலில் பாலம் கட்ட இலங்கையுடன் ஒப்பந்தத்தை இந்தியா செய்துகொள்ளவேண்டும்.சிங்கள தீவுக்கு ஓர் பாலம் அமைப்போம் சீனா காரனை விரட்டியடிப்போம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X