பொது செய்தி

தமிழ்நாடு

ஏபிவிபி தலைவர் மீதான புகார் வாபஸ்

Updated : ஜூலை 26, 2020 | Added : ஜூலை 26, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement
ஏபிவிபி, தலைவர், சிறுநீர் கழித்த விவகாரம், புகார், வாபஸ்

சென்னை: பார்க்கிங் தொடர்பான பிரச்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்த பக்கத்து வீட்டு பெண்மணிக்கு தொல்லை கொடுத்ததாக ஏபிவிபி தலைவர் மீது வழக்கு பதியப்பட்டிருந்த நிலையில், அப்பெண் தற்போது புகாரை வாபஸ் பெற்றுள்ளார்.

சென்னை நங்கநல்லூரைச் சேர்ந்தவர் மருத்துவர் சுப்பையா. கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியின் புற்றுநோய் அறுவை சிகிச்சை துறை தலைவராக பணியாற்றி வருகிறார். இவர் ஆர்.எஸ்.எஸ்., மாணவர் அமைப்பான ஏபிவிபியின் தேசிய தலைவராகவும் உள்ளார். இவர் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் பக்கத்து வீட்டு பெண்மணியுடன் சில நாட்களுக்கு முன் பார்க்கிங் தொடர்பான பிரச்னை எழுந்துள்ளது. இதனால் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


latest tamil news


பின்னர் அப்பெண்மணியின் வீட்டின் முன் பயன்படுத்தப்பட்ட முகக்கவசங்கள், கழிவுகள் போன்றவை கொட்டப்பட்டுள்ளன. இது தொடர்ந்து வந்ததால் ஜூலை 10-ம் தேதி தனது வீட்டு வாசலில் சிசிடிவி கேமிராவை பொருத்தியுள்ளார் அப்பெண்மணி. அதில் நீல நிற டிஷர்ட், ஷார்ட்ஸ் அணிந்த நபர் சிறுநீர் கழிக்கும் காட்சிகள் பதிவாகியிருந்தது. அது சுப்பையா தான் என கூறி அவர் மீது ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

சுப்பையா மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த நிலையில் அப்பெண்மணியின் வீட்டிற்கு சென்று நேற்று (ஜூலை 26) சுப்பையா மன்னிப்பு கேட்டதாக கூறப்படுகிறது. குடியிருப்புவாசிகளும் சமாதானமாக செல்லுமாறு வலியுறுத்தியுள்ளனர். இதனை ஏற்று புகாரை அப்பெண் வாபஸ் பெற்றுக்கொண்டார்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
30-ஜூலை-202016:16:38 IST Report Abuse
Malick Raja காலம் விரைவில் பதில் சொல்லும் .. கவலைப்படாதே சகோதரா ..
Rate this:
Cancel
Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ
29-ஜூலை-202014:41:32 IST Report Abuse
Rasheel ஒரு பெண்ணிடம் ஒரு மருத்துவ படிப்பு படித்த நபர் செய்யும் காரியமா இது? கேவலம். படித்த படிப்பின் பெற்றோர் வளர்ப்பின் தரம் தெரிகிறது.
Rate this:
Cancel
தாமரை செல்வன்-பழநி - பழநி,இந்தியா
28-ஜூலை-202022:24:56 IST Report Abuse
தாமரை செல்வன்-பழநி என்னதான் ஒரு பெண்மணியுடன் தகராறு வந்தாலும் இந்தமாதிரி அசிங்கமாக நடந்துகொண்டது இவர் சார்ந்த இயக்கத்துக்குத்தான் அவப்பெயரை பெற்றுத் தரும். இந்த நபர் ABVP யில் பொறுப்பு வகிக்க லாயக்கற்றவர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X