பொது செய்தி

இந்தியா

ஆக.,1 முதல் தியேட்டர்கள், ஜிம்கள் திறக்க அனுமதி?

Updated : ஜூலை 26, 2020 | Added : ஜூலை 26, 2020 | கருத்துகள் (12)
Share
Advertisement
August, Theater, Gyms, reopen, Coronavirus, Corona, Covid-19, Curfew, Lockdown, unlock, ஆகஸ்ட்1, தியேட்டர்கள், ஜிம்கள், திறக்க அனுமதி

புதுடில்லி: நாடு முழுவதும் ஊரடங்கு தளர்வு 3.0 ஜூலை 31ம் தேதியுடன் முடிவடையும் நிலையில், அடுத்தகட்ட ஊரடங்கு தொடர்பாக வழிகாட்டுதல்களை மத்திய அரசு உருவாக்கி வருகிறது. ஆக.,1 முதல் புதிய வழிகாட்டுதல்கள் அமலுக்கு வருமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் கடந்த மார்ச் முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. பொருளாதார பாதிப்பை கருத்தில் கொண்டு, பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு தளர்வு 2.0, ஜூலை 31 வரை அமலில் இருந்து வருகிறது. மூன்றாவது கட்டமாக அமலாகும் ஊரடங்கில், படிப்படியாக கட்டுப்பாடுகளை தளர்த்துவதுடன், மேலும் சில தளர்வுகளை அரசு அறிவிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி, சமூக இடைவெளியை பின்பற்றுவது கட்டாயம் என்ற நிபந்தனையுடன், வரும் ஆக.1 முதல் சினிமா திரையரங்குகளை மீண்டும் திறக்க அனுமதி அளிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.


latest tamil newsஅதேநேரத்தில், பள்ளிகள் மற்றும் மெட்ரோ ரயில் சேவைகள் உள்ளிட்டவை தொடர்ந்து மூடப்பட்டிருக்குமென கூறப்பட்டுள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் சார்பில் மீண்டும் பள்ளிகள் திறப்பு தொடர்பாக பள்ளி கல்வி செயலாளர் அனிதா கார்வால் தலைமையிலான குழு, அனைத்து மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறது. மூன்றாவது கட்ட ஊரடங்கில் உடற்பயிற்சி கூடங்களை மீண்டும் திறக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.


latest tamil newsமத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம், சினிமா திரையரங்குகளை மீண்டும் திறக்க, உள்துறை அமைச்சகத்துக்கு முன்மொழிந்துள்ளது. இதற்கு முன்னர் சினிமா திரையரங்கு உரிமையாளர்களிடம், மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் ஆலோசனை நடத்தியது. அதில் 50 சதவீத இருக்கைகளுடன் சினிமா திரையரங்குகளை திறக்க உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், மத்திய தகவல், ஒளிபரப்புத்துறை அமைச்சகம், ஆரம்பத்தில் 25 சதவீத இருக்கைகள் மற்றும் அனைத்து சமூக இடைவெளி நடைமுறைகளை பின்பற்றுமாறு பரிந்துரைத்துள்ளது. இது தவிர, கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மற்றும் கள நிலவரங்களின் அடிப்படையில், சொந்தமாக வழிகாட்டுதல்களை உருவாக்கி கொள்ள மத்திய அரசு அதிகாரம் வழங்கலாம்.

Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Aaaaa - Bbbbbb,இந்தியா
27-ஜூலை-202014:02:28 IST Report Abuse
Aaaaa எல்லா கட்டுபாட்டையும் நீக்கினால் Herd immunity விரைவில் பெற இயலும். சுவீடன் நாட்டில் அரசு இதுவரை எந்த விதமான கட்டுபாடும் விதிக்கவில்லை. மக்களே சுயகட்டுபாட்டுடன் தனிமனித இடைவெளியுடன் வாழ்கின்றனர்
Rate this:
Cancel
தாமரை செல்வன்-பழநி - பழநி,இந்தியா
27-ஜூலை-202011:56:28 IST Report Abuse
தாமரை செல்வன்-பழநி தமிழனுக்கு மிகவும் முக்கியத் தேவைகளே டாஸ்மாக்கும் சினிமா தியேட்டரும்தான். மது கொண்டுவர டில்லி வரை போராடி அனுமதி பெற்றது தமிழக அரசு. இப்போது தியேட்டர்களும் வந்துவிடும். தமிழனின் கனவுகளை தொடர்ந்து நிறைவேற்றி வரும் எடப்பாடி அரசு வாழ்க....
Rate this:
Cancel
Tamilnesan - Muscat,ஓமன்
26-ஜூலை-202021:55:31 IST Report Abuse
Tamilnesan தமிழக மக்களுக்கு தியேட்டரில் சினிமா பார்க்கவில்லை என்றால் பிறவி பயனை அடைய முடியாது. சாப்பாட்டிற்கு வழி இருக்கிறதோ இல்லையோ, சினிமா ரொம்ப முக்கியம். திரை அரங்குகள் திறந்தால் அனைவருக்கும் கொரநா கோடிக்கணக்கில் மிக விரைவில் பரவும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X