பொது செய்தி

இந்தியா

ஒரே நாளில் உ.பி.,யில் 3,260, பீஹாரில் 2,605 பேருக்கு கொரோனா

Updated : ஜூலை 26, 2020 | Added : ஜூலை 26, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
corona, coronavirus, covid-19, corona cases, corona update, coronavirus update, corona cases worldwide, corona crisis, covid 19 pandemic, worldwide crisis, coronavirus count, corona toll, corona India, up, Uttar Pradesh, உத்தரபிரதேசம்,


புதுடில்லி: கடந்த 24 மணி நேரத்தில் உ.பி.,யில் 3,260 பேருக்கும், பீஹாரில் 2,605 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சிக்கிம் மாநிலத்தில், கொரோனாவுக்கு முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 48 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்க கொரோனா உறுதியானதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 லட்சத்தை நெருங்குகிறது. உயிரிழப்பும் 32 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

தெலுங்கானாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,593 பேருக்கு கொரோனா உறுதியானனது. 998 பேர் குணமடைந்தனர். 9 பேர் உயிரிழந்தனர். இதனால், அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 54,059 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 41,322 ஆகவும், மொத்த பலி 463 ஆகவும் உள்ளது என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

ஹிமாச்சல பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 21 பேருக்கு தொற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு 2,072 ஆக அதிகரித்துள்ளது. அதில், 869 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1,174 பேர் குணமடைந்துள்ளனர். 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

டில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 1,075 பேருக்கு கொரோனா உறுதியானதால், மொத்த பாதிப்பு 1,30,606 ஆக அதிகரித்துள்ளது. மொத்த பலி 3,827 ஆனது. கடந்த 24 மணி நேரத்தில் 1,807 பேர் குணமடைந்தனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,14,875 ஆனது.

சிக்கிம் மாநிலத்தில் கொரோனா பாதித்த 74 வயது நபர் உயிரிழந்தார். இதனால், அந்த மாநிலத்தில் கொரோனாவுக்கு முதல் பலி ஏற்பட்டுள்ளது.


latest tamil news



புதுச்சேரியில் மேலும் 131 பேருக்கு தொற்று உறுதிபடுத்தப்பட்டதால், மொத்த பாதிப்பு 2,787 ஆனது. 1,102 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 40 பேர் உயிரிழந்துள்ளனர்.

பீஹாரில் கடந்த 24 மணி நேரத்தில் 2,605 பேருக்கு கொரோனா உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதனால், மொத்த பாதிப்பு 38,919 ஆனது.

உ.பி.,யில் மேலும் 3,260 பேருக்கு தொற்று உறுதிபடுத்தப்பட்டது. அங்கு, தற்போது 23,921 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 41,641 பேர் குணமடைந்துள்ளனர். 1,426 பேர் உயிரிழந்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ராஜேஷ் - பட்டுக்கோட்டை ,இந்தியா
26-ஜூலை-202018:28:25 IST Report Abuse
ராஜேஷ் 22 crores people 7cross
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X