பொது செய்தி

இந்தியா

காக்கா முட்டை கதை போல் ம.பி.,யில் நடக்கும் கோழி முட்டை அரசியல்

Updated : ஜூலை 26, 2020 | Added : ஜூலை 26, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
Indore, Egg Seller, Cart, Bribe, Flat, Free Education, இந்தூர், முட்டை, சிறுவன், லஞ்சம், சலுகைகள்

இந்தூர்: மத்திய பிரதேசத்தில் ரூ.100 லஞ்சம் தராததால் சிறுவனின் தள்ளுவண்டி முட்டை கடையை கவிழ்த்து மாநகராட்சி அதிகாரிகள் சேதப்படுத்திய சம்பவம் வீடியோவாக வைரலான நிலையில், சிறுவனுக்கு தற்போது காங்., - பா.ஜ.க.,வினர் போட்டி போட்டுக்கொண்டு உதவுகின்றனர்.

தமிழில் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான திரைப்படம் காக்கா முட்டை. பீட்சா கடை வாசலில் நின்று வேடிக்கைப் பார்க்கும் இரண்டு குப்பத்து சிறுவர்களை கடை மேலாளர் அடித்து விரட்டுவார். அதனை மற்ற சிறுவர்கள் செல்போனில் படம் பிடித்து இணையத்தில் வெளியிடுவார்கள். இப்பிரச்னையை சமாளிப்பதற்காக அந்த குப்பத்து சிறுவர்களையே சிறப்பு விருந்தினராக பீட்சா கடைக்கு அழைத்து விருந்தளிப்பார் கடை முதலாளி. இது போன்ற சம்பவம் தற்போது கோழி முட்டையால் ம.பி.,யில் நடந்துள்ளது.


latest tamil newsகடந்த வியாழனன்று இந்தூரில் தள்ளுவண்டியில் 13 வயது சிறுவன் முட்டைகளை வைத்து விற்பனை செய்து வந்தான். அவனிடம் 'கடையை காலி செய் இல்லையென்றால் நூறு ரூபாய்' லஞ்சம் கொடு என்று மாநகராட்சி அதிகாரிகள் கேட்டுள்ளனர். ஊரடங்கினால் வியாபாரம் இல்லை என சிறுவன் கெஞ்சியுள்ளான். அதனை பொருட்படுத்தாமல் இரக்கமின்றி மொத்த முட்டைகளோடு தள்ளுவண்டியை கவிழ்த்துச் சென்றனர் ஊழியர்கள். இச்சம்பவத்தை சிறுவன் விவரிக்கும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி கடும் கண்டனத்தை பெற்றது.


latest tamil news


இந்த நிலையில் சிறுவனின் குடும்பத்திற்கு இந்தூர் பா.ஜ., எம்.எல்.ஏ ரமேஷ் மென்டோலா, பிரதம மந்திரி ஆவாஸ் திட்டத்தின் கீழ் வீடு பெற்றுத்தருவதாக கூறியுள்ளார். சிறுவனுக்கு சைக்கிளும், ரூ.2,500 பணமும் தந்துள்ளார். காங்.,ன் திக் விஜய் சிங் ரூ.10 ஆயிரம் நிதி உதவி செய்துள்ளார். இரண்டு பிள்ளைகளின் படிப்பு செலவை ஏற்பதாக உறுதியளித்துள்ளார். ராகுல் அலுவலகம், பா.ஜ.,வின் ஜோதிர் ஆதித்ய சிந்தியா, அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரும் சிறுவனுக்கு உதவுவதாக உறுதியளித்துள்ளனர். இது தவிர பொது மக்கள் பலரும் சிறுவனுக்கு பண உதவி செய்துள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lt Col M Sundaram (Retd) - Thoothukudi 628 008 ,இந்தியா
26-ஜூலை-202019:28:29 IST Report Abuse
Lt Col M Sundaram (Retd) What action is taken against the erring govt official? Police and govt official are always show their strength on the People Below Poverty line
Rate this:
Cancel
a.r.k - ,
26-ஜூலை-202017:34:37 IST Report Abuse
a.r.k இதில் வருத்தப்பட வேண்டியது என்னவென்றால் ஒரு சம்பவம் நடந்த பின் விளம்பரத்திற்காக முண்டியடித்து உதவி செய்வதைவிட மக்கள் பிரச்சனை உணர்ந்து உதவி செய்யும் மனப்பான்மை வந்தாலே nadu munerum.
Rate this:
Cancel
26-ஜூலை-202017:25:22 IST Report Abuse
ஆப்பு பரவாயில்லியே இதுமாதிரி ஏதாவது செஞ்சு அடிவாங்குனா பிரதமர் இலவச வீடு. ஆழ்துளை கிணத்துலே பையன் விழுந்தா பெற்றோர்களுக்கு 10, 15 லட்சம். செல்போன்கடை ஆளுங்க போலிஸ் கஸ்டடியில் செத்தா 20 லட்சம். ஏழைப் பங்காளர்கள் தங்கள் சொந்தப் பணத்தில் எடுத்து குடுக்கிறாங்கோ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X