ராமர் கோயில் பூமி பூஜையை காணொலியில் நடத்துங்கள்: உத்தவ் தாக்கரே

Updated : ஜூலை 26, 2020 | Added : ஜூலை 26, 2020 | கருத்துகள் (12)
Share
Advertisement
Ram Temple, Bhoomi Puja, Video Link, Uddhav, Uddhav Thackeray, ராமர், கோயில், பூமி பூஜை, காணொலி, வீடியோ, உத்தவ் தாக்கரே

மும்பை: லட்சக்கணக்கான ராம பக்தர்கள் ராமர் கோயில் பூமி பூஜைக்கு செல்ல ஆர்வமாக இருப்பதால் அவர்கள் புறப்பட்டு வந்துவிடுவார்கள் என்பதால் பூமி பூஜையை காணொலி காட்சி மூலம் நடத்த வேண்டும் என சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே யோசனை தெரிவித்துள்ளார்.


latest tamil news



அயோத்தியில் ராமர் கோயில் கட்ட உச்ச நீதிமன்ற அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து ஸ்ரீ ராம ஜன்ம பூமி தீர்த்தஷேத்திர அறக்கட்டளை அமைக்கப்பட்டு பூமி பூஜைக்கு ஆகஸ்ட் 5-ம் தேதி நாள் குறிக்கப்பட்டுள்ளது. இதற்காக பிரதமர் மோடி அடிக்கல் நாட்ட உள்ளதாகவும், நிகழ்ச்சியில் சமூக இடைவெளியை உறுதி செய்வதற்காக, 150 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுத்துள்ளதாகவும் அறக்கட்டளையின் பொருளாளர் தெரிவித்தார். இந்தச் சூழலில் சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ நாளேடான சாம்னாவில் அந்தக் கட்சியின் தலைவரும், மகாராஷ்டிர மாநில முதல்வருமான உத்தவ் தாக்கரே நேர்காணல் அளித்துள்ளார்.


latest tamil news


அதில் ராமர் கோயில் பூமி பூஜை குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:
அயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை நடத்தப்பட வேண்டும். இது மகிழ்ச்சிக்கான, ஆர்ப்பரிப்புக்கான நாள். ஆனால் இந்தப் பெருமைமிகு பூமி பூஜையை அனைவரும் காணும் வகையில் காணொலி மூலம் நடத்த வேண்டும். இந்தப் பூமி பூஜைக்குச் செல்ல லட்சக்கணக்கான ராம பக்தர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். நாம் கொரோனா வைரஸ் அங்கு பரவுவதை அனுமதிக்கலாமா? ராமர் கோயில் கட்டுவது என்பது பல்வேறு போராட்டங்களுக்குப் பின் நிறைவேறுகிறது. இது மற்ற கோயில்களைப் போல் சாதாரணக் கோயில் அல்ல.


latest tamil news



இன்று நாம் கொரோனா வைரசுடன் போராடி வருகிறோம். மதரீதியான கூட்டங்கள் கொரோனா வைரஸ் பரவலால் தடை செய்யப்பட்டுள்ளன. என்னால் கூட அயோத்திக்குச் சென்று ராமர் கோயில் பூமி பூஜை நிகழ்ச்சியில் பங்கேற்க முடியும். ஆனால், லட்சக்கணக்கான ராம பக்தர்களை நினைத்துப் பாருங்கள். அவர்கள் தாங்களும் அந்த நிகழ்ச்சியைப் பார்க்க வேண்டும் என நினைத்துப் புறப்பட்டால் அவர்களை உங்களால் தடுக்க முடியுமா?. பூமி பூஜையை காணொலி மூலம் நடத்தலாமே. ராமர் கோயில் என்பது நம்பிக்கை சார்ந்தது. அங்கு செல்லும் மக்களை எப்படி உங்களால் தடுக்க முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
r.sundaram - tirunelveli,இந்தியா
27-ஜூலை-202014:41:14 IST Report Abuse
r.sundaram முதலில் நானும் பூஜையில் கலந்து கொள்வேன் என்று சொன்னீர்களே, தற்போது பல்டியா? பவாரின் எல்லைக்கோட்டை தாண்டி வர முடிய வில்லையா? பாவம் இதற்க்கே இப்படி என்றால் இன்னும் ஆட்சியில் என்னவெல்லாம் நடக்க போகிறதோ?
Rate this:
Cancel
Mohamed Basha - Doha,கத்தார்
27-ஜூலை-202014:04:46 IST Report Abuse
Mohamed Basha உண்மையை சொன்னால் காங்கிரஸ்காரரா ... மக்கள் நன்மைக்காக எது சொன்னாலும் தப்புதான் போலெ ...இந்த மாதிரி பேசக்கூடிய ஒரு ஆள் இருந்தால் ஏன்தான் நாட்டில் கலவரம் வராது ... பாவம் புண்ணியம் பற்றி பேசுவதற்கு தருணம் உண்டு ... கருத்து பதிவிடவும் யோசிக்கவும் ...
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
26-ஜூலை-202020:56:11 IST Report Abuse
Lion Drsekar வீர சிவாஜி பிறந்த மண்ணில் பிறந்த நீங்கள் கூடா நட்பு மிகப் பெரிய நெருடல், விட்டுக்கொடுக்காத அவர்களுக்கும் ஒரு களங்கம், மொத்தத்தில் நம்மில் ஒற்றுமை இல்லையென்றால் மீண்டும் சூது கவ்வும், வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X