பொது செய்தி

தமிழ்நாடு

சென்னையில் 1,315 பேர், திருவண்ணாமலையில் 681 பேர் டிஸ்சார்ஜ்

Updated : ஜூலை 26, 2020 | Added : ஜூலை 26, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
CoronaCases, Districtwise, Discharge, Covid-19 in_Chennai, Corona, CoronaVirus, COVID-19, Corona Deaths, Corona Update, TAMIL NADU, Positive Cases, Chennai Fights Corona, new coronavirus cases, corona spread, coronavirus outbreak, tn news, health, COVID-19 cases in Chennai, corona patients in chennai, chennai fights corona, tn fights corona, india, சென்னை, கொரோனா, பாதிப்பு, மாவட்ட வாரியாக, டிஸ்சார்ஜ்

சென்னை: தமிழகத்தில் இன்று (ஜூலை 26) அதிகபட்சமாக சென்னையில் 1,315 பேரும், திருவண்ணாமலையில் 681 பேரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தின் கடந்த சில நாட்களாக தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது. இன்று அதிகபட்சமாக சென்னையில் 1,155 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் இதுவரை 94,695 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை தவிர்த்து, இன்று, செங்கல்பட்டில் 501 பேருக்கும், திருவள்ளூரில் 480 பேருக்கும், விருதுநகரில் 385 பேருக்கும், ராணிப்பேட்டையில் 367 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 363 பேருக்கும், தூத்துக்குடியில் 248 பேருக்கும், கோவையில் 220 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.


latest tamil news




உயிரிழப்பு

இன்று சென்னையில் 26 பேரும், மதுரையில் 8 பேரும், செங்கல்பட்டு, திருவள்ளூர், விருதுநகரில் தலா 5 பேரும், திருநெல்வேலி, வேலூரில் தலா 4 பேரும், காஞ்சிபுரம், கன்னியாகுமரி, ராணிப்பேட்டை, திருவண்ணாமலையில் தலா 3 பேரும், ராமநாதபுரம், தென்காசி, தேனியில் தலா 2 பேரும், கோவை, தருமபுரி, நாகப்பட்டினம், நாமக்கல், புதுக்கோட்டை, சேலம், தஞ்சாவூர், திருப்பத்தூர், தூத்துக்குடி, திருச்சியில் தலா ஒருவரும் என 85 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.


டிஸ்சார்ஜ்

இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக சென்னையில் 1,315 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக, திருவண்ணாமலையில் 681 பேரும், திருவள்ளூரில் 524 பேரும், தூத்துக்குடியில் 302 பேரும், சிவகங்கையில் 256 பேரும், மதுரையில் 249 பேரும், திருநெல்வேலியில் 231 பேரும் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.


மாவட்ட வாரியாக இன்றைய நிலவரம்



latest tamil news



latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Bangalore,இந்தியா
26-ஜூலை-202020:35:51 IST Report Abuse
Ramesh Sargam அண்ணாமலையானே என்று இந்த கொரோனா முற்றிலும் ஒழியும். என்று உங்கள் கோவில் பக்தர்களுக்காக திறக்கும். என்று நாங்கள் மாத பௌர்ணமி கிரிவலம் மீண்டும் சுற்ற ஆரம்பிப்போம்?? என்று எங்கள் இயல்பு வாழ்க்கை மீண்டும் வாழ தொடங்குவோம்? அண்ணாமலையானுக்கு அரோஹரா. உண்ணாமுலையம்மனுக்கு அரோஹரா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X