பொது செய்தி

தமிழ்நாடு

கோவையில் சிறார் ஆபாச படங்களை பதிவிறக்கி பகிர்ந்த ஒருவர் கைது

Updated : ஜூலை 26, 2020 | Added : ஜூலை 26, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement

கோவை: கோவை மலுமிச்சம்பட்டி பகுதியைச் சேர்ந்த 48 வயது நபர், சிறார்களின் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து, மற்றவர்களுக்கு பகிர்ந்ததால் கைது செய்யப்பட்டுள்ளார்.



latest tamil news



சிறார்களின் ஆபாச படங்களை பகிர்வதன் மூலம் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து இது போன்ற படங்களை வெளியிடும் வலைதளங்களுக்கு மத்திய அரசு தடை விதித்து. இது போன்ற படங்களை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்பவர்கள், பரிமாறுபவர்கள் என, அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க காவல்துறை முன் வந்தது. இதன்படி தமிழகத்தில் தீவிரமாக கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


latest tamil news



இந்நிலையில் கோவை செட்டிபாளையம் அருகேயுள்ள மலுமிச்சம்பட்டி அம்பாள் நகரைச் சேர்ந்தவர் சுனில்குமார், 48; இவர் விமான நிலைய உணவகத்தில் பணியாற்றி வந்தார். சுனில்குமார் தடை செய்யப்பட்ட மற்றும் சிறார்களின் ஆபாசப் படங்கள், வீடியோக்களை பதிவிறக்கம் செய்து, அதை மற்றவர்களுக்கு பகிர்ந்து வருவதாக மாவட்ட காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து செட்டிபாளையம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், குற்ற செயல் உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து, சுனில் குமார் கைது செய்யப்பட்டார். அவர் மீது போலீசார் போக்சோ, தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வெகுளி - Maatuthaavani,இந்தியா
26-ஜூலை-202022:34:38 IST Report Abuse
வெகுளி கயவனின் மொகர கட்டய செய்தியில் காட்டினால் மக்கள் காரி துப்ப வசதியாயிருக்கும்....
Rate this:
Cancel
26-ஜூலை-202021:10:07 IST Report Abuse
ஆப்பு என்கவுண்டர் செஞ்சு, கொரோனால போயிட்டதா சொல்லிடலாம். இல்லேன்பா, பொள்ளாச்சி கிரிமினல்கள் மாதிரி சேஃபா ஜெயில்ல வெச்சு பாதுகாப்பு குடுப்பாங்க.
Rate this:
Cancel
தியாகி சுடலை மன்றம் அவன் பெயர் பர்வீன் மாலிக். திமுக கட்சி உறுப்பினர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X