பொது செய்தி

இந்தியா

ஆகஸ்டில் விற்பனைக்கு வரும் சிப்லா நிறுவனத்தின் கொரோனா சிகிச்சை மாத்திரை

Updated : ஜூலை 26, 2020 | Added : ஜூலை 26, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement

புதுடில்லி: இந்தியாவில் பன்னாட்டு மருந்து தயாரிப்பு நிறுவனம் 'சிப்லா', கொரோனா சிகிச்சைக்கு பயன்படும் மாத்திரைக்கு இந்திய அரசின் மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பிடம் அனுமதி பெற்றுள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் விற்பனைக்கு வர உள்ள சிப்லென்ஸ் என்ற பெயரிடப்பட்டுள்ள இந்த மாத்திரை ஒன்றின் விலை ரூ 68 என சிப்லா நிறுவனம் அறிவித்துள்ளது.



latest tamil news



சீனாவிலிருந்து பரவி உலக நாடுகளை நிலைகுலைய வைத்து வரும் கொரோனாவுக்கு இன்னும் தனிப்பட்ட சிகிச்சை மருந்துகள் தயாரிக்கப்படவில்லை. இருந்தாலும் இன்ப்ளூன்ஸாவுக்கு அளிக்கப்படும் பேவிபிராவிர் மருந்து பரவலாக கொரோனா சிகிச்சையில் பயன்படுகிறது. கொரோனாவால் சாதாரண பாதிப்பு முதல் மிதமான பாதிப்பு உள்ளவர்களுக்கு பேவிபிராவிர் மருந்து அளிக்கப்படுகிறது. இந்தியாவில் இந்த மாத்திரையை தயாரிக்க சிப்லா நிறுவனம் அனுமதி பெற்றுள்ளது.


latest tamil news



இது குறித்து சிப்லா நிறுவனம், 'கொரோனா அதிகம் பரவியுள்ள பகுதிகளில் இந்த மாத்திரை விநியோகத்திற்கு முக்கியத்துவம் வழங்கப்படும். அனைவருக்கும் மாத்திரைகள் கிடைக்கும் வகையில் மருத்துவமனைகள் மற்றும் மருந்துக்கடைகளில் இந்த மாத்திரைகள் விரைவில் வழங்கப்படும்' இவ்வாறு அறிவித்துள்ளது

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
27-ஜூலை-202011:53:20 IST Report Abuse
Malick Raja இது உண்மையாக விளைவோம் . வாழ்த்துக்கள்
Rate this:
Cancel
Nallavan Nallavan - கோல்கத்தா,இந்தியா
26-ஜூலை-202021:05:41 IST Report Abuse
Nallavan Nallavan CIPLA verY GOOD COMPANY தரமான மருந்து கொடுப்பவர்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X