பொது செய்தி

இந்தியா

தெலுங்கானாவில் சராசரியை விட 30 சதவீதம் அதிக மழை பெய்துள்ளது

Updated : ஜூலை 26, 2020 | Added : ஜூலை 26, 2020
Share
Advertisement

ஐதராபாத் : பருவ மழை காரணமாக தெலுங்கானாவில் இந்த ஜூலை மாதத்தில் மட்டும் 30 சதவீதம் அதிகமாக மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



latest tamil news



தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் தெலுங்கானா, பீஹார், உத்தரகண்ட், குஜராத், உ.பி., அசாம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. அதிகமாக பெய்து வரும் மழையால் அசாம், பீஹார் உள்ளிட்ட வட மாநிலங்களில் நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 1 மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். ஆயினும் தெலுங்கானாவில் தேவையான (சராசரி) அளவை விட சற்று அதிகமாக மழை பெய்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் பருவமழை தெலுங்கானாவினை சிறந்த முன்னேற்ற பாதைக்கு எடுத்து செல்லும்.

தெலுங்கானா தொடர்ந்து, விவசாயத்திற்கு முன்னுரிமை அளிப்பதால் அதற்கான நடவடிக்கைகளுக்காக நீர்ப்பாசன திட்டங்கள் மூலம் மழை நீர் சேகரிக்கப்பட்டு சிறந்த முறையில் பயன்படுத்தப்படுகிறது. தற்போது தெலுங்கானாவில் இயல்பான அளவை விட முழுபலத்தடன் மழை பெய்துள்ளதால் ஐதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் இம்மாத இறுதிக்கு முன்பே அதிகமான மழை பெய்துள்ளது. இது தவிர ஆக., மற்றும் செப்., மாதங்களில் சீரானஅளவில் மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.


latest tamil news



கடந்த ஆண்டு ஜூலையில் மழை குறைவாக பொழிந்து வறண்ட வானிலையை காணப்பட்டது. தற்போது ஐதராபாத்திலும் ஜூன் 1 முதல் ஜூலை 23 வரை இயல்புக்கு எதிராக 50% உபரியாக மழை பெய்துள்ளது. தெலுங்கானா மாநில திட்டமிடல் மேம்பாட்டு சங்கம் (TSPDS) படி, ஜூன் 1 முதல் ஜூலை 23 வரை ஐதராபாத்தில் 318.8 மி.மீ மழை பெய்தது. அதே நேரத்தில் ரங்காரெட்டியில் 285.5 மி.மீ மற்றும் மேட்சல் மல்கஜ்கிரியில் 272.0 மி.மீ பதிவு செய்தது.


latest tamil news



இது தவிர, மாநிலத்தில் 30 சதவீதம் அதிக மழை பெய்தது. இது சராசரியை விட அதிகரித்து தற்போது 396.7 மி.மீ மழை பெய்துள்ளது. 33 மாவட்டங்களில் நிர்மல் மற்றும் நிஜாமாபாத்தை தவிர மற்ற மாவட்டங்களில் அதிகமாக மற்றும் மிக அதிகமாக (கனமழை) பெய்துள்ளது. ஐதராபாத்தில் இதுவரை 47 செ.மீ மழை பெய்துள்ளது. இது ஏற்கனவே சாதாரண மழையின் 50 சதவீதத்திற்கும் அதிகமாகும். மேலும் செப்., மாதத்திற்குள் இன்னும் அதிகரிக்கலாம். அதிகரித்து வரும் கனமழை காரணமாக மாநிலத்தில் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கவும், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தும் விதமாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X