பொது செய்தி

இந்தியா

கேரளாவில் புதிதாக 927 பேருக்கு கொரோனா

Updated : ஜூலை 26, 2020 | Added : ஜூலை 26, 2020
Share
Advertisement
kerala, covid19, coronavirus, கேரளா, கொரோனா

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று புதிதாக 927 பேருக்கு கொரோனா உறுதியானதையடுத்து, மாநிலத்தில் மொத்த பாதிப்பு 19 ஆயிரத்தை கடந்தது.

சீனாவிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. கொரோனா பரவலின் ஆரம்ப கட்டத்தில், கேரளாவில் கட்டுக்குள் இருந்த கொரோனா, வெளி நாடுகளிலிருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும் வந்தவர்களால் தற்போது அதிகரித்து வருகிறது.


latest tamil news



இந்நிலையில், கேரளாவில் இன்று புதிதாக, 927 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 19,026 ஆக அதிகரித்தது. கடந்த 24 மணி நேரத்தில் 689 பேர் கொரோனாவிலிருந்து மீண்டதையடுத்து, இதுவரை கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 9,300 ஆக அதிகரித்துள்ளது. 9,656 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதிதாக இருவர் பலியானதையடுத்து மொத்த பலி 62 ஆக உயர்ந்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X