திருப்பதியில் கொரோனாவில் இருந்து மீ்ட்கப்பட்ட 101 வயதான மூதாட்டி

Updated : ஜூலை 26, 2020 | Added : ஜூலை 26, 2020
Share
Advertisement

திருப்பதி : திருப்பதியில் கொரோனா பாதித்த 101 வயதான மூதாட்டி நோய் தொற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.



latest tamil news



கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆந்திராவில் கொரோனா பாதிப்புகளை கட்டுக்குள் வைக்க அம்மாநில அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. திருப்பதியில் ஸ்ரீ பத்மாவதி மகளிர் மருத்துவமனையில் 101 வயது மூதாட்டி ஒருவர் கொரோனா தொற்றில் இருந்து தற்போது மீட்கப்பட்டுள்ளார்.


latest tamil news



இது தொடர்பாக அம்மருத்துவமனையின் கண்காணிப்பாளர் ராம் கூறுகையில், திருப்பதியில் கொரோனா பாதித்த நோயாளிகளில், 101 வயதான மங்கம்மாவும் ஒருவர். சில நாட்களுக்கு முன் இவருக்கு தொற்று இருப்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டது. அதனால் கொரோனா சிகிச்சைக்காக தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் உள்ளமருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட சுகாதார பணியாளர்கள் அவருக்கு சிறந்த சிகிச்சையை அளித்தனர். அவரும் நோயின் தன்மையை அறிந்து மருத்துவர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளித்ததால் தற்போது தொற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளார்.

கொரோனா காரணமாக உயிருக்கு பயப்படுபவர்களுக்கு மங்கம்மா ஒரு முன்மாதிரியாக நிற்கிறார். தனது 101 வயதிலும், மங்கம்மா தைரியமாகவும் நம்பிக்கையுடனும் நின்றார், சிகிச்சைக்கு ஒத்துழைத்தார், இப்போது ஆரோக்கியமான நிலையில் நேற்று குணமடைந்து வீடு திரும்பினார். இவ்வாறு கூறினார். மங்கம்மா தொற்றில் இருந்து மீள்வதற்கு உதவியமருத்துவமனை நிர்வாகம் மற்றும் பிற மருத்துவ ஊழியர்களுக்கு அவரது குடும்பத்தினர் நன்றியை தெரிவித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X