பொது செய்தி

இந்தியா

கொரோனா பாதித்தால் அச்சப்படாதீர்கள்: ம.பி., முதல்வர் சவுகான்

Updated : ஜூலை 26, 2020 | Added : ஜூலை 26, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
Madhya Pradesh, Chief Minister, Shivraj Singh Chouhan, covid19, corona virus

போபால் : கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் அச்சப்படாதீர்கள் என கொரோனாவால் பாதிப்புக்குள்ளாகி இருக்கும் ம.பி., முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

பா.ஜ., மூத்த தலைவரும், ம.பி., முதல்வருமாகிய சிவாராஜ் சிங் சவுகானுக்கு நேற்று(ஜூலை 25) கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் போபாலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டள்ளார்.

இந்நிலையில் சவுகான் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: நண்பர்களே நான் நலமுடன் இருக்கிறேன். சுயநலமின்றி, அர்ப்பணிப்புடன், உயிரை பணயம் வைத்து பணியாற்றும் கொரோனா வாரியர்சின் சேவை மதிப்பு வாய்ந்தது. கொரோனாவுக்கு எதிராக போராடும் அனைவருக்கும் எனது சல்யூட்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டால் அஞ்சாதீர்கள். அறிகுறிகள் தென்பட்டால், பரிசோதித்து, சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள். கொரோனாவுக்கு எதிரான பெரிய ஆயுதம், மாஸ்க் மற்றும் சமூக இடைவெளி. இதனை தவறாமல் பின்பற்றுங்கள். இவ்வாறு பதிவிட்டுள்ளார்.


latest tamil news




வீடியோ கான்பரன்சிங்கில் மீட்டிங்:


இந்நிலையில், மருத்துவமனையில் இருந்தபடியே, கொரோனா தடுப்பு பணிகள் குறித்து, அதிகாரிகளுடன் வீடியோ கான்பரன்சிங்கில் சிவராஜ் சிங் சவுகான் ஆலோசனை நடத்தினார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
26-ஜூலை-202022:08:38 IST Report Abuse
A.George Alphonse "காரோணவிலும் கருமமே கண்ணாயிரம்" விரைவில் நலம்பெற வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
26-ஜூலை-202021:27:21 IST Report Abuse
Lion Drsekar எந்த ஒரு வியாதிகளால் மக்களுக்கு என்றைக்குமே அச்சம் என்பதே கிடையாது ஆனால் குழந்தைகளுக்கு பூச்சாண்டி காட்டி சோறு ஊட்டுவதுபோல் கொரோன கொரோனா என்று வரும் செய்தி மட்டுமே தினம் தினம் வாட்டுகிறது, ஊரடங்கின்போது யாருக்குமே ஒரு ஜுரம் கூட வந்தது இல்லை ஆனால் இப்போது எல்லோருக்கும் கொரோனா என்றால் பயம், பீதி, ஆகவே இந்த கடுமையான வியாதியைப்பற்றிய விழிப்புணர்வு மட்டுமே தேவையே தவிர பயமுறுத்தும் செய்திதான் தவறு, வந்தே மாதரம்
Rate this:
Cancel
26-ஜூலை-202021:06:01 IST Report Abuse
ஆப்பு பெரியவர் பேச்சைக் கேட்டு கேட்டு எல்லோரும் சல்யூட்... காரிய சாதனைதான்???
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X