பொது செய்தி

தமிழ்நாடு

போலீசாருக்கு கொரோனா; கோவையில் 7 காவல் நிலையங்கள் மூடல்

Updated : ஜூலை 26, 2020 | Added : ஜூலை 26, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement

கோவை: எஸ்.ஐ.,க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், கோவையில் ஏழாவதாக இன்று, வெரைட்டி ஹால் ரோடு காவல் நிலையம் மூடப்பட்டது.



latest tamil news




கொரோனா வைரஸ் தொற்றின் பரவலைக் கட்டுப்படுத்த சுகாதாரம், மருத்துவம், மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி மற்றும் காவல்துறை என, பல்வேறு துறைகளும் இணைந்து பணியாற்றி வருகின்றன. இதில், போலீசாரின் பங்கு குறிப்பிடத்தக்கது. ஊரடங்கு விதி மீறுபவர்களை கண்காணிக்கும் பணியில் போலீசார் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இப்படி மக்கள் கூடும் இடங்களுக்குச் செல்ல நேர்வதால், கோவையில் பணியாற்றும் போலீசாருக்கு கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. போலீசாருக்கு தொற்று ஏற்படுவதால், அவர்கள் பணியாற்றும் காவல் நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டு வருகின்றன.


latest tamil news



கடந்த இரு வாரத்தில் போத்தனூர், குனியமுத்தூர், துடியலூர், சூலூர், உக்கடம் மற்றும் தொண்டாமுத்தூர் காவல் நிலையங்களில் பணியாற்றும் போலீசாருக்கு அடுத்தடுத்து தொற்று உறுதியானது; அவர்கள் பணிபுரிந்த காவல் நிலையங்கள் மூடப்பட்டன.

இந்நிலையில், கோவை வெரைட்டிஹால் ரோடு போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றி வரும், 40 வயதுடைய எஸ்.ஐ.,க்கு சளி, காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனையில் கொரோனா தொற்று இன்று உறுதியானது. இதையடுத்து அவர், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ள சுகாதாரத் துறையினர் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளனர். எஸ்.ஐ., பணிபுரிந்த வெரைட்டிஹால் ரோடு போலீஸ் ஸ்டேஷன் மூடப்பட்டு தற்காலிகமாக அருகில் உள்ள திருமண மண்டபத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. கடந்த இரு மாதங்களில், மூடப்படும் ஏழாவது போலீஸ் ஸ்டேஷன் இதுவாகும்.


latest tamil news



கோவையில் கடந்த இரு வாரத்தில் 40க்கும் மேற்படட போலீசாருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது; இதுவரை ஏழு காவல் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. போலீசார் மத்தியில் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருவதால் காவல் துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
27-ஜூலை-202000:07:14 IST Report Abuse
தல புராணம் தானம் கொடுத்த மாட்டை பல்லை பிடிச்சு பாக்கவா முடியும்?.. வாங்குற லஞ்ச காசை கோவிட் பரிசோதனை பண்ணவா முடியும் ?
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
26-ஜூலை-202021:44:52 IST Report Abuse
Lion Drsekar இன்றுவரை பல முறை கூறியும் யாருமே ரூபாய் நோட்டுக்களை பரிசோதனைக்கு உட்படுத்தாமல் இருப்பது ஏனென்றே தெரியவில்லை, இதனால் அவர்களுக்கு என்ன செலவாகிப்போகிறது, மக்களுக்கு ஒரு விழ்ப்புணர்வுதானே, நோயாளிகள் எதைத்தொட்டாலும் பரவுகிறது என்று கையை கழுவு, உன் முகத்தை நீயே தொடாதே என்று கூறும்போது இந்த ரூபாய் நோட்டு மட்டும் எப்படி என்று புரியவில்லை, வந்தே மாதரம்
Rate this:
தல புராணம் - மதுரை,இந்தியா
27-ஜூலை-202000:06:43 IST Report Abuse
தல புராணம்மாமூல் வாழ்க்கை பாதிக்கும், அதனால் தான்.. ஹா ஹா.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X