பொது செய்தி

இந்தியா

வந்தே பாரத் திட்டத்தின் கீழ் 8.14 லட்சம் இந்தியர்கள் மீட்பு ; அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி

Updated : ஜூலை 26, 2020 | Added : ஜூலை 26, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

புதுடில்லி : வந்தே பாரத் திட்டத்தின் கீழ் 8.14 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் திருப்பி அழைத்து வரப்பட்டதாக சிவில் விமான போக்குவரத்துதுறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார்.



latest tamil news



கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஊரடங்கால் வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்கள் வந்தே பாரத் திட்டத்தின் மூலம் சொந்த ஊர்களுக்கு அழைத்து வரப்படுகின்றனர். தற்போது உள்நாட்டு விமான சேவையும் இயக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக டில்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறுகையில், வந்தே பாரத் திட்டத்தின் கீழ் இதுவரை 8.14 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் பல்வேறு நாடுகளில் இருந்து சிறப்பு விமானங்கள் மூலமாக திருப்பி அழைத்து வரப்பட்டனர். மே.,6 முதல் 8,14,000 க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பல்வேறு வழிகளில் சொந்த ஊர்களுக்கு திரும்பினர். இவற்றில் 2,70,000 பேர் 53 நாடுகளில் இருந்து ஏர் இந்தியா உள்ளிட்ட விமானங்கள் வழியாக இந்தியா திரும்பினர். பலர் கப்பல்கள் மூலமாகவும் அழைத்து வரப்பட்டனர்.


latest tamil news



வந்தே பாரத் திட்டத்தில் பல்வேறு கட்டங்களாக ஒவ்வொரு நாடுகளில் இருந்தும் இந்தியா திரும்ப விரும்பும் நபர்கள் அழைத்து வரப்படுகின்றனர். ஆக., 1 முதல் வந்தே பாரத் மிஷன் திட்டத்தின் 5 வது கட்டமாக இந்தியர்களை மீண்டும் அழைத்து வரவும் மத்திய அரசு தயாராகி வருகிறது. 5 ஆம் கட்ட டிக்கெட் முன்பதிவு குறித்த விவரங்களை ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் பிற விமான நிறுவனங்கள் விரைவில் பகிர்ந்து கொள்ளும்.


latest tamil news



5 வது கட்டத்தின்படி, இந்தியாவை அமெரிக்கா, கனடா, கத்தார், ஓமான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சிங்கப்பூர், லண்டன், பிராங்பேர்ட், பாரிஸ், சவுதி அரேபியா, பஹ்ரைன், நியூசிலாந்து மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளுடன் இணைக்கும். பல்வேறு நாடுகளில் சிக்கி தவிக்கும் ஒவ்வொரு இந்தியரும் இந்த திட்டத்தின் மூலமாக மீட்கப்படுவதற்கான நடவடிக்கைகளில் அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இவ்வாறு தெரிவித்தார்.


Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சிவ.இளங்கோவன் . - Thanjavur,இந்தியா
27-ஜூலை-202016:58:25 IST Report Abuse
சிவ.இளங்கோவன் . உண்மை வெளிநாட்டுக்கு பிழைக்கப்போய் இன்று உயிருடன் ஊருக்கு செல்வோமா என்று பலர் தவித்து வருகின்றனர் ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X