பொது செய்தி

இந்தியா

'கனவு நனவாகியது': பிரிட்டன் ராணி எலிசபெத் உடன் பேசிய கோல்கட்டா தூதரக அதிகாரி

Updated : ஜூலை 26, 2020 | Added : ஜூலை 26, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
கோல்கட்டா : பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் உடன் பேசியதன் மூலம் எனது கனவு நனவாகியது என கோல்கட்டாவை சேர்ந்த தூதர அதிகாரி சஞ்சிபிதா மெக்டொனால்ட் தாரியாங் சென் தெரிவித்தார்.கோல்கட்டாவில் பிரிட்டிஷ் துணை தூதரகத்தில், தூதரக மேம்பாட்டு அதிகாரியாக பணிபுரியும், சஞ்சிபிதா மெக்டொனால்ட் தாரியாங் சென் (45), ஊரடங்கின் போது, இந்தியாவில் 11 நகரங்களிலிருந்து, 66 விமானங்கள்
Britain Queen, Queen Elizabeth II, consular officer, Kolkata

கோல்கட்டா : பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் உடன் பேசியதன் மூலம் எனது கனவு நனவாகியது என கோல்கட்டாவை சேர்ந்த தூதர அதிகாரி சஞ்சிபிதா மெக்டொனால்ட் தாரியாங் சென் தெரிவித்தார்.


latest tamil newsகோல்கட்டாவில் பிரிட்டிஷ் துணை தூதரகத்தில், தூதரக மேம்பாட்டு அதிகாரியாக பணிபுரியும், சஞ்சிபிதா மெக்டொனால்ட் தாரியாங் சென் (45), ஊரடங்கின் போது, இந்தியாவில் 11 நகரங்களிலிருந்து, 66 விமானங்கள் மூலம், 18 ஆயிரம் இங்கிலாந்து மக்கள், தாயகம் செல்லும் பணியை மேற்கொண்டார். இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 24ம் தேதி) பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் உடன் வீடியோ கான்பரன்சிங் வழியாக பேச, உலகெங்கும் 3 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில், சஞ்சிபிதாவும் ஒருவர்.

வீடியோ கான்பரன்சிங்கில் பேசிய பிரிட்டன் ராணியிடம், சிக்கித் தவிக்கும் பிரிட்டிஷ் பயணிகளை வீட்டிற்கு வர உதவிய தனது அனுபவத்தை சஞ்சிபிதா விவரித்தார்.


latest tamil newsஇதுகுறித்து அவர் கூறுகையில், 'ராணியிடமிருந்து அழைப்பு வருவதற்கு முன் நான் மிகவும் பதற்றமாக இருந்தேன். ஆனால் அவர், அழகாகவும், பணிவாகவும் நடந்துகொண்டார். அது எனக்கு நிம்மதியை தந்தது. பல ஆண்டுகளாக எனக்குத் தெரிந்த ஒருவரிடம் நான் பேசுவதாக உணர்ந்தேன்' எனத் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ கான்பரன்சிங் அழைப்பு, சுமார் 20 நிமிடங்கள் நீடித்தது.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Chandramoulli - Mumbai,இந்தியா
31-ஜூலை-202014:33:23 IST Report Abuse
Chandramoulli நாட்டில் கல்வி , மருத்துவம் முன்னேற்றம் எப்படி இருக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் கட்டுரை தான் நமக்கு முக்கிய தேவை .
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
26-ஜூலை-202021:42:20 IST Report Abuse
Lion Drsekar ஜனநாயக நாட்டில் தேர்தல் நேரத்தில் மட்டுமே மக்களின் பிரநிதிகளை நேரில் பார்க்க முடியும் , சந்திக்க முடியும் , எல்லாம் கர்மவீரர் காலத்தோடு முடிந்து விட்டது, வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X