துபாய் வரும் பயணிகளுக்கு ஆக.,1 முதல் பிசிஆர் பரிசோதனை அவசியம்| Dinamalar

துபாய் வரும் பயணிகளுக்கு ஆக.,1 முதல் பிசிஆர் பரிசோதனை அவசியம்

Updated : ஜூலை 26, 2020 | Added : ஜூலை 26, 2020
அபுதாபி : துபாய் விமான நிலையங்களில் ஆக.,1 முதல் பல்வேறு நாடுகளை சேர்ந்த பயணிகளுக்கு பிசிஆர் பரிசோதனை அவசியம் என எமிரேட்ஸ் தெரிவித்துள்ளது.கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட பல வளைகுடா நாடுகளிலும் தொற்று நோயின் பரவல் அதிகமாக உள்ளது. நோய் பாதிப்புகளை கட்டுக்குள் வைக்க துபாய் அரசும் பல்வேறு கட்ட

அபுதாபி : துபாய் விமான நிலையங்களில் ஆக.,1 முதல் பல்வேறு நாடுகளை சேர்ந்த பயணிகளுக்கு பிசிஆர் பரிசோதனை அவசியம் என எமிரேட்ஸ் தெரிவித்துள்ளது.latest tamil newsகொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட பல வளைகுடா நாடுகளிலும் தொற்று நோயின் பரவல் அதிகமாக உள்ளது. நோய் பாதிப்புகளை கட்டுக்குள் வைக்க துபாய் அரசும் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் துபாய்க்கு செல்லும் அனைத்து பயணிகளும் கொரோனா தொற்றுக்கான பரிசோதனையில் எதிர்மறையை (தொற்று இல்லாத நிலை) பிசிஆர் (PCR) சோதனையை உறுதிப்படுத்த வேண்டும் என்று துபாய் சிவில் ஏவியேஷன் ஆணையம் (DCAA) கடந்த வாரம் அறிவித்தது.
எமிரேட்ஸ் வழியாக பயணிப்பவர்கள் உட்பட, துபாய் நாட்டிற்கு வரும் அனைத்து விமான பயணிகளும் கட்டாயமாக தொற்று பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். அதாவது பரிசோதனை செய்யப்பட்ட விமான நிலையத்தில் இருந்து (பயணிகள் கிளம்பும் விமான நிலையத்தில்) புறப்படுவதற்கு 96 மணி நேரத்திற்கு முன் இருக்க வேண்டும் என விமானநிறுவனங்கள் தகவல் தெரிவித்தன. அதன்படி, ஆக., 1 முதல் குறிப்பிட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு நோய் பரிசோதனை (PCR Test) கட்டாயமாக இருக்கும். அதற்கான 29 நாடுகளின் பட்டியலை அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ளது.


latest tamil news

அந்த 29 நாடுகள் :


ஆப்கானிஸ்தான், அர்மீனியா, பிரேசில், ஜிபூட்டி, வங்காளதேசம், எகிப்து, எரித்திரியா, இந்தியா, இந்தோனேசியா, ஈரான், ஈராக், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், லெபனானன், மாண்டினீக்ரோ, நைஜீரியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், ரஷ்யா, செரிபியா, சோமாலியா, தென்னாப்பிரிக்கா, இலங்கை, சூடான், தஜிகிஸ்தான், தான்சானியா, துர்க்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான் மற்றும் அமெரிக்க விமான நிலையங்களான ( டல்லாஸ் போர்ட் வொர்த் (DFW), ஹூஸ்டன் (IAH), லாஸ் ஏஞ்சல்ஸ் (LAX), சான் பிரான்சிஸ்கோ (SFO), போர்ட் லாடர்டேல் (FLL) மற்றும் ஆர்லாண்டோ (MCO) - கலிபோர்னியா, புளோரிடா மற்றும் டெக்சாஸ் (Texas) உட்பட பல்வேறு பகுதிகளையும் துபாய்க்கு இணைப்பதற்கான எமிரேட்சுடன் இணைக்கிறது.

விமான நிறுவனங்களின் அறிவிப்பின்படி, துபாய் சர்வதேச மற்றும் அல் மக்தூன் விமான நிலையங்களிலும் பயணிகள் பிசிஆர் சோதனைக்கு ( PCR Test) உட்படுத்தப்பட வேண்டும். ஆக.,1 முதல் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் மேலே பட்டியலிடப் பட்டுள்ள ஒரு இடத்திலிருந்து பயணிக்காவிட்டால், இந்த சோதனையை இனி எடுக்க வேண்டிய அவசியமில்லை என்று எமிரேட்ஸ் தெளிவுபடுத்தியது. அதனால் பிற நாடுகளில் இருந்து துபாய்க்கு வரும் பயணிகள் கட்டாயமாக (96 மணிநேரத்திற்கு முன்னான) எதிர்மறை சோதனைக்கான [ நோய் தொற்று இல்லை ] அறிக்கையை வைத்திருக்க வேண்டும். இந்த சான்றிதழ் (அறிக்கை) இல்லாமல் விமானத்தில் பயணிகள் ஏற அனுமதியில்லை.


latest tamil newsஇந்தியா, பாகிஸ்தான், ரஷ்யா போன்ற நாடுகளைச் சேர்ந்த பயணிகள் அந்த நாடுகளில் உள்ள அரசு நிறுவனங்களால் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகங்களிலிருந்து பி.சி.ஆர் பரிசோதனையைச் செய்யலாம் என்பதை இது காட்டுகிறது. மேலும் பயணத்திறற்கான தகுதியை சரிபார்க்க க்யூ ஆர் கோடு (QR Code) அவசியமாகும். ஐக்கிய அரபு எமிரேட் விமான நிலையங்கள் தற்போது வரும் அனைத்து பயணிகளுக்கும் பி.சி.ஆர் சோதனைகளை இலவசமாக நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X