எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க.,வில் ஓங்குகிறது உதயநிதி கை; மா.செ.,க்கள் நியமனத்தில் இளைஞரணி ஆதிக்கம்

Updated : ஜூலை 27, 2020 | Added : ஜூலை 26, 2020 | கருத்துகள் (20)
Share
Advertisement
DMK, Udhayanidhi, Udhayanidhi Stalin, திமுக, உதயநிதி, இளைஞரணி, ஆதிக்கம்

சென்னை மேற்கு மாவட்ட, தி.மு.க., பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட சிற்றரசு உட்பட, மூன்று மாவட்ட பொறுப்பாளர்கள், தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதியின் தீவிர ஆதரவாளர்கள் என்பதால், கட்சியில் அவரது கை ஓங்குகிறது என, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா நிவாரண பணிகளில் ஈடுபட்டிருந்த, ஜெ.அன்பழகனுக்கு, கொரோனா தொற்று ஏற்பட்டு, மரணம் அடைந்தார். அவர் வகித்து வந்த மாவட்ட செயலர் பதவிக்கு, மூத்த நிர்வாகிகள் மத்தியில் கடும் போட்டி ஏற்பட்டது.


அதிருப்தி :


உதயநிதி பரிந்துரையில், சென்னை மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சிற்றரசுக்கு, மாவட்ட பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. சிற்றரசு வகித்து வந்த, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பதவி, ஜெ.அன்பழகனின் மகன் ராஜாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை, தி.மு.க., தலைவர் ஸ்டாலினும், உதயநிதியும் வெளியிட்டுள்ளனர்.

உதயநிதி பரிந்துரையில், சிற்றரசு நியமிக்கப்பட்டுள்ளதால், கட்சியில் சீனியர் நிர்வாகிகள் சிலர், கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். தி.மு.க., இளைஞரணி நிர்வாகத்தை மட்டும் கவனித்து வந்த உதயநிதி, தற்போது கட்சி நிர்வாகத்திலும் ஆதிக்கம் செலுத்துவதால், அவரது கை ஓங்கி வருகிறது.

இது குறித்து, கட்சி வட்டாரங்கள் கூறியதாவது: கருணாநிதி மறைவுக்கு பின், தி.மு.க.,வுக்கு ஸ்டாலின் தான், ஒரே தலைவர் என, சீனியர்கள் நம்புகின்றனர். ஆனால், இனி ஸ்டாலின், உதயநிதி என, இரண்டு தலைவர்கள் உள்ளனர் என, இளைஞர் அணி நிர்வாகிகள் கூறுகின்றனர். தி.மு.க.,வில், மொத்தம், 16 அணிகள் இருக்கின்றன. அதில், ஒரு அணி தான் இளைஞர் அணி. மற்ற அணிகளில் இருப்பவர்கள், தகுதி இருந்தும், 'சீனியாரிட்டி' இருந்தும், மாவட்ட செயலர் பதவியை பெறுவது இயலாதது.

42 வயது இளைஞரணிக்கு, உதயநிதி தலைமை ஏற்ற பின், அடுத்தடுத்து இளைஞரணியினர், மாவட்ட பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். திருச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளராக, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நாமக்கல் கிழக்கு மாவட்ட பொறுப்பாள ராக ராஜேஷ்குமார், தற்போது, சென்னை மேற்கு மாவட்ட பொறுப்பாளராக, சிற்றரசு ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதில், வேடிக்கை என்னவென்றால், நாமக்கல் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் ராஜேஷ்குமாருக்கு, 42 வயதாகிறது.

ஆனால், சமீபத்தில் நியமிக்கப்பட்ட, நாமக்கல் கிழக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளருக்கு, 50 வயதாகிறது. மாவட்ட செயலர் பதவி என்பது, கலெக்டர் பதவிக்கு இணையாக, தி.மு.க.,வில் கருதப்பட்ட காலம் மாறி விட்டது. மாவட்ட செயலர்களுக்கு கீழே தான், இளைஞரணி அமைப்பாளர்கள் செயல்பட வேண்டும் என்பது, கட்சி விதி.


புதிய விதி


ஆனால், உதயநிதியின் அரசியல் பிரவேசத்திற்கு பின், மாவட்ட செயலர்களே, இளைஞரணிக்கு கட்டுப்பட்டது போல, ஒரு புதிய விதி உருவாக்கப்பட்டுள்ளது. மூத்த நிர்வாகிகளை, ஒரு பொருட்டாகவே, இளைஞரணி நிர்வாகிகள் மதிப்பதில்லை. ஸ்டாலினுக்கு இணை அதிகாரம் மையமாக, உதயநிதி செயல்படுகிறார், அவரது வாக்கு, வேதவாக்காக கருதப்படுகிறது என, மூத்த நிர்வாகிகள் குமுறுகின்றனர்.

துரைமுருகனுக்கு, பொதுச்செயலர் பதவி வழங்கப்படாமல் இருப்பதற்கு, இளைஞரணி நிர்வாகிகள் சிலர் காரணம் என, அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். இவ்வாறு, தி.மு.க., வட்டாரங்கள் கூறின.

- நமது சிறப்பு நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
02-ஆக-202000:28:01 IST Report Abuse
Ramesh R ஸ்டாலினுக்கு பிறகு இவன் வந்தால் .....முடிந்தது சகாப்தம். ஆர் ராசா போன்றோர் வெளியில் வரவேண்டும் .........ஆர் ராசா நல்ல பேச்சாளர் மற்றும் அரசியல் ஞானம் உள்ளவர், உதயநிதி ஒரு ஞான சூனியம்
Rate this:
Cancel
Covaxin - Bharat Hindustan,இந்தியா
01-ஆக-202017:08:54 IST Report Abuse
Covaxin சாகும் வரைக்கும் முதல்வர் ஆசையிலேயேதான் இருந்தது... அந்த நிதி... இந்த நிதி... என்று பெயரை வைத்துக்கொண்டு தமிழ்நாட்டின் மொத்த நிதியையும் சுருட்டிக்கொண்டிருக்கிறது கட்டுமரக்குடும்பம்...
Rate this:
Cancel
Covaxin - Bharat Hindustan,இந்தியா
01-ஆக-202012:17:01 IST Report Abuse
Covaxin வாரிசு அரசியலும் சர்வாதிகாரமும் தீயமுகவில் இருக்கும் ஓசி பிரியாணி மங்குணிகளுக்கு இன்னும் புரியவில்லை...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X