சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

'கருணாநிதிக்கு தர்ப்பணம் செய்த ஸ்டாலின்!'

Added : ஜூலை 26, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
 'கருணாநிதிக்கு தர்ப்பணம் செய்த ஸ்டாலின்!'

''தனியே தன்னந்தனியே...'' என பாடியபடியே, பெஞ்சில் அமர்ந்தார், அந்தோணிசாமி.''என்ன குஷியா இருக்குறீரு ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.

''மின் கட்டண குளறுபடிகளை கண்டிச்சு, சில நாட்களுக்கு முன்னாடி, தி.மு.க., சார்புல, தமிழகம் முழுக்க, ஆர்ப்பாட்டம் நடந்துச்சுங்க... ''மதுரை, தி.மு.க., விலும், பல கோஷ்டிகள் செயல்படுதுங்க... மதுரையில இருக்குற, கட்சி அலுவலகம் பக்கத்துல, தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம் செஞ்சாங்க...''ஆனா, அதுல பங்கேற்க, திருப்பரங்குன்றம், எம்.எல்.ஏ., டாக்டர் சரவணனை கூப்பிடலையாம்... ''பாவம் அவரு, இந்த கோஷ்டி அரசியலை சமாளிக்க முடியாமல், செல்லுாருல, தன் ஆதரவாளர்களுடன், தனியாக ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்காருங்க...

''இதுக்கு இடையில, கஷ்டப்படுற சிலருக்கு, தன் மருத்துவமனையில வேலை போட்டு கொடுக்குறது; தள்ளுவண்டி வாங்கி கொடுக்குறதுன்னு நலத்திட்ட உதவிகள் செஞ்சு, 'நானும் ஆட்டத்துல இருக்கேன்னு' தி.மு.க., தலைமைக்கு போட்டோ அனுப்பிட்டு வர்றாராமுங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.

''அதிகாரிகளும், ஒப்பந்ததாரர்களும் கூட்டணி போட்டுண்டு, பொதுப்பணித்துறைக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுத்திட்டாளாம் ஓய்...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார், குப்பண்ணா.

''எப்படி வே...'' எனக் கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.

''பொதுப்பணித் துறையில, 'மிஷனரி டிபார்ட்மென்ட்' இருக்கு ஓய்... இந்த பிரிவு வாயிலா, துறைக்கு சொந்தமான இரும்பு தளவாடங்கள் ஏலம் விடுவா ஓய்...''இங்கிலாந்துல இருந்து எடுத்துண்டு வந்த, பழங்காலத்து இரும்பு பொருட்களை, தங்கசாலையில் இருக்கற கிடங்குல இருந்து, ஏலம் விட்டுருக்கா... இந்த இரும்பு பொருட்களோட மொத்த மதிப்பு, 10 கோடி ரூபாயாம் ஓய்... ''அது, 5 கோடி ரூபாய் வரைக்கும் விலை போகும்னு மதிப்பு போட்டாளாம்... ஆனா, அதிகாரிகளும், ஒப்பந்ததாரர்களும் கூட்டணி போட்டுண்டு, வெறும், 1.40 கோடிக்கு ஏலம் விட்டுருக்கா ஓய்...

''இதனால, துறைக்கு, 8.60 கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டு இருக்காம்... ஆனால், அதிகாரிகளுக்கு செம லாபம் கிடைச்சுருக்காம் ஓய்...'' எனக் கூறி முடித்தார், குப்பண்ணா.

''ஆடி அமாவாசை அன்னைக்கு, தந்தைக்கு செய்ய வேண்டிய இறை கடமையை செஞ்சிருக்காராம் பா...'' என, கடைசி தகவலுக்கு மாறினார், அன்வர்பாய்.

''இதுல என்ன சுவாரஸ்யம் ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.

''ஹிந்துக்கள் எல்லாம், மறைந்த, தங்களது முன்னோருக்காக, நீர்நிலைகளுக்கு போய், தர்ப்பணம் கொடுத்து, வழிபடுவாங்க... இந்த கொரோனா காலத்துல, சில தளர்வுகளுடன், தர்ப்பணம் செய்ய, அரசு அனுமதி வழங்கி இருந்துச்சு பா...

''சமீபத்துல வந்த, ஆடி அமாவாசை அன்னைக்கு, சென்னை மெரினா கடற்கரையில இருக்குற, முன்னாள் முதல்வர், கருணாநிதி சமாதிக்கு, அவரது மகனும், தி.மு.க., தலைவருமான, ஸ்டாலின் தனி நபராக போய், மலர் துாவி, வணங்கிட்டு வந்தாராம் பா...'' என, விளக்கினார் அன்வர்பாய்.

''இதுல, சுவாரஸ்யம் இருக்கறது ஓய்...'' என, குப்பண்ணா கூற, நண்பர்கள் சிரித்தபடியே நடையை கட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sathyanarayanan Subramanian - Tambaram,இந்தியா
28-ஜூலை-202011:47:35 IST Report Abuse
Sathyanarayanan Subramanian தயிர் வடை குவார்ட்டர் பிரியாணி அதெல்லாம் இல்லை? தர்ப்பணம் போது சுடலை.?
Rate this:
Cancel
s vinayak - chennai,இந்தியா
28-ஜூலை-202011:14:39 IST Report Abuse
s vinayak சென்றவரை திருப்தி படுத்துவதால் இந்த தலைப்பு பொருத்தமானது என்று எண்ணுகிறேன்.
Rate this:
Cancel
மூல பத்திரம் - ரோம், ,இத்தாலி
27-ஜூலை-202014:06:09 IST Report Abuse
மூல பத்திரம் கருப்பார் கூட்டம் விமர்சிக்குமா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X