சிறப்பு பகுதிகள்

சிந்தனைக் களம்

முந்நுாறு நோய்களை விரட்டும் முருங்கை!

Updated : ஜூலை 26, 2020 | Added : ஜூலை 26, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
முருங்கை பல விதமான மருத்துவ குணம் கொண்டது; முந்நுாறு நோய்களை விரட்டும். எலும்புகளுக்கு வலுவூட்டும். அலோபதி மருத்துவத்தில் மூட்டு வலி, கால் வலி, இடுப்பு மற்றும் கழுத்து வலிக்குத் தரப்படும் மருந்து மாத்திரைகள், தைலங்கள் எல்லாம் முருங்கையில் இருந்தே தயாரிக்கப் படுகின்றன. மூளை மற்றும் நரம்பு மண்டலம் வலுப்படுத்தும் அனைத்து வைட்டமின்கள், 'அமினோ' அமிலங்கள் இதில்
 முந்நுாறு நோய்களை விரட்டும் முருங்கை!

முருங்கை பல விதமான மருத்துவ குணம் கொண்டது; முந்நுாறு நோய்களை விரட்டும். எலும்புகளுக்கு வலுவூட்டும். அலோபதி மருத்துவத்தில் மூட்டு வலி, கால் வலி, இடுப்பு மற்றும் கழுத்து வலிக்குத் தரப்படும் மருந்து மாத்திரைகள், தைலங்கள் எல்லாம் முருங்கையில் இருந்தே தயாரிக்கப் படுகின்றன.

மூளை மற்றும் நரம்பு மண்டலம் வலுப்படுத்தும் அனைத்து வைட்டமின்கள், 'அமினோ' அமிலங்கள் இதில் நிறைய உள்ளன. முருங்கை விதைகளில் இருந்து எடுக்கப்பட்ட, 100 மி,லி., எண்ணெயில் கிட்டத்தட்ட, 250 முருங்கை காய்களின் சத்து உள்ளது. உணவாகவும் மருந்தாகவும் பயன்படுகிறது.


நெடி இருக்காது


அனைத்து தோல் நோய்களுக்கும், தோல் மினுமினுப்பு, கரும்புள்ளிகள் அனைத்துக்கும், இது தீர்வாகும். தலையில் தோன்றும் பொடுகு நீங்கும். தேங்காய் எண்ணெய் போல, தலைக்கு தேய்த்து, தலை வாரி கொள்ளலாம்; எந்த நெடியும் இருக்காது.'ஆன்டி ஏஜிங்' எனப்படும், முதுமையை தவிர்க்கும் குணங்கள் இதில் நிறைய உள்ளன. அதுபோல, 'ஆன்டி ஆக்சிடன்ட்ஸ்' அதிகம் உள்ளது. குழந்தைகளுக்கு ஆறு மாதங்கள் ஆனது முதல், முருங்கை கொடுக்கலாம்.

சளி அது தொடர்பான, 'வீசிங்' எனப்படும் மூச்சுத் திணறல் எல்லாம் சரியாகும்.நம் உணவு, தண்ணீர், காற்று, மேலும் நாம் நோய்கள் தீரும் என்று உண்ணும் மருந்துகளால் ஏராளமான நச்சுக் கழிவுகள், உடலில் ரத்தத்தில் மற்றும் முக்கிய உறுப்புகளான மூளை, இதயம், சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல் போன்ற அனைத்து பகுதிகளிலும் தேங்கியுள்ளன. கிளியோபாட்ரா நாள்தோறும் சில துளி நெய் போல, முருங்கை எண்ணெய் சாப்பிட்டு வந்தால், இந்த கழிவுகளை, எந்த தொந்தரவும் இல்லாமல் வெளியேற்றலாம்.

ஆண்மை குறைபாடு, பெண்களுக்கு ஏற்படும் கருப்பை தொடர்பான நோய்கள் எல்லா வற்றுக்கும் இந்த எண்ணெய் உட்கொண்டு வந்தால் பலன் கிடைக்கும். வெட்டுக் காயங்கள், தீக்காயங்கள் போன்றவற்றையும் ஆற்றும்.எகிப்து நாட்டின் அப்போதைய ராணி, கிளியோபாட்ராவின் அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பில் முருங்கை எண்ணெய் முதலிடம் பெற்றிருந்தது.


நன்முருங்கை பசும் இலைப்பொடி


'மிராக்கிள் ட்ரீ'- என அழைக்கப்படும், நன்முருங்கை பசும் இலைப்பொடி, தாவர உணவுகளில் அரிதான, உடலுக்கு அத்தியா வசியமான அனைத்து அமினோ அமிலங்களை கொண்டுள்ளன. குறிப்பாக, 'ஒமேகா- 3,6 மற்றும் 9 மற்றும் நுண்ணுாட்டச் சத்துக்கள், தாதுக்கள் ஆகியவற்றைத் தரவல்லது.

நன்முருங்கை பசும் இலைப்பொடி கொண்ட சமச்சீரான உணவும், தொடர் உடற்பயிற்சியும் எடுத்துக் கொண்டால், அது உங்களுக்கும், வளரும் குழந்தைகளுக்கும் தேவையான அன்றாட ஊட்டச்சத்துக்களை வழங்குவதுடன், சிறந்த உடல், மன, புத்தி கூர்மைக்கான அடித்தளத்தை உருவாக்க உதவுகிறது.புரதம் எதற்காக?புரதம் தான் உடலின் தசைகள், எலும்புகள், சருமம் மற்றும் இதர உடல் பாகங்களை உருவாக்கும் பொருளாகும்.

மேலும், புரதம் உடலின் வளர்ச்சிக்கும், அன்றாட பாதிப்புகளில் இருந்து உடலைப் பராமரிப்பதற்கும் மிகவும் அவசியமானதாகும். உடலின் அனைத்து செல்களும் புரதத்தால் ஆனவை. உடல் உறுப்புகள் நகம், தலைமுடி, சருமம் உட்பட திசுக்களை உருவாகுவதற்கும் அவற்றைப் பழுது பார்ப்பதற்கும் புரதம் தேவைப்படுகிறது.

கட்டுடல் பெறச்செய்து பலமுள்ளவராகவும், சுறுசுறுப்பாகவும், புத்தி கூர்மையுடன் இருப்பதற்குப் புரதம் உதவுகிறது. ஆரோக்கியமான நபர், அவரின் உடல் எடையின் அடிப்படியில், ௧ கிலோவிற்கு, 1 கிராம் என்ற அளவில் புரதத்தை உட்கொள்ள வேண்டும்.


புரதம் அவசியம்


நம் உடல் செல்களுக்கு, தொடர்ச்சியாக புரதம் தேவைப்படுகிறது. செல்கள், புரதத்தைத் தொடர்ச்சியாக பயன்படுத்துகின்றன. ஆனால் அவற்றால் புரதத்தைச் சேமித்து வைக்க இயலாது. ஆகையால், நம் தினசரி உணவில், புரதம் இருப்பது அவசியமாகும். முருங்கை இலைப் பொடி சாப்பிட்டு வர, 'அனிமியா' எனப்படும் ரத்த சோகை விரைவில் குணமாகும்.

ரத்தத்தில், 'ஹீமோகுளோபின்' அளவு விரைவாக அதிகரிக்கும். இலைப் பொடியை தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து, இனிப்பு சேர்த்து, தேநீராகப் பருகலாம். மிளகு, சீரகம், உப்பு சேர்த்து, 'சூப்' செய்து குடிக்கலாம்.

இட்லி, தோசை, சப்பாத்தி மாவில் கலந்து சமைத்து உண்ணலாம். தனியாக கீரை சமைத்து உண்ண நேரமில்லை என்று கவலைப்பட வேண்டாம். ஒரே ஒரு தோசை என்றாலும் ஓரிரு சிட்டிகை அளவு முருங்கை இலை பொடி கலந்து, தோசை செய்ய முடியும்.

தொடர்புக்கு: மிராக்கிள் ஆர்கனிக்ஸ், மதுரை

73585 73411

miracleorganicsindia@gmail.com

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DUBAI- Sivagangai babu Kalyan - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
28-ஜூலை-202017:01:49 IST Report Abuse
DUBAI- Sivagangai babu Kalyan Now , Murungai leaf powder ts are available in ISHA Arokiya , daily morning can take 2 ts daily ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X