தெரு விளக்குகளில் கண்காணிப்பு அமைப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தெரு விளக்குகளில் கண்காணிப்பு அமைப்பு

Added : ஜூலை 26, 2020
Share

சென்னை : 'சென்னை மாநகராட்சியில், தெரு விளக்கு துாண்களில், தொலை கண்காணிப்பு அமைப்பு ஏற்படுத்தப்பட உள்ளது' என, உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.
அவர் தன், 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியிருப்பதாவது:சென்னை மாநகராட்சியில் உள்ள, தெரு விளக்குகளை, மாநகராட்சியின் தலைமையகத்தில் இருந்தே கட்டுப்படுத்த, விளக்கு துாண்களில், தொலை கண்காணிப்பு அமைப்பு நிறுவப்பட உள்ளது.மின்சார ஏற்ற இறக்கங்களை, தானாகவே சரி செய்து கொள்ளும்படியும், விளக்குகளில் பழுது ஏற்பட்டால், உள்ளூர் பொறியாளருக்கு, தானாக எஸ்.எம்.எஸ்., அனுப்பி எச்சரிக்கும் படியும், இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

பொது முடக்க காலத்தில், தீவிரமாக பணியாற்றி வரும் காவலர்களுக்கு, ஊக்கமளிக்கும் விதமாக, திருவள்ளூர் மாவட்டம், கீழ்நல்லாத்துார் கிராமத்தை சேர்ந்த, ரகுராமன் -- ஜெயந்தி தம்பதியின் மகள் பூஜிதா, தன் உண்டியல் பணத்தை, மாவட்ட எஸ்.பி.,யிடம் அளித்துஉள்ளது, நெகிழ்ச்சி அளிக்கிறது.சிறுமிக்கும், அவரது பெற்றோருக்கும், என் பாராட்டுகள். சிறுமியை பாராட்டி, அவருக்கு தன் சொந்த செலவில், சைக்கிள் வாங்கி கொடுத்துள்ள, உளுந்தை கிராம ஊராட்சி தலைவர் ரமேசுக்கு வாழ்த்துக்கள். இவ்வாறு, அமைச்சர் கூறியுள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X