விவசாயி குடும்பத்துக்கு நீதி கிடைக்க நடவடிக்கை வேண்டும் ; ஸ்டாலின்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

விவசாயி குடும்பத்துக்கு நீதி கிடைக்க நடவடிக்கை வேண்டும் ; ஸ்டாலின்

Added : ஜூலை 26, 2020 | கருத்துகள் (1)
Share
சென்னை : 'விசாரணைக்கு அழைத்து சென்ற விவசாயி முத்துவின், உயிர் பறிப்பதற்கு காரணமான, வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். அவரது அறிக்கை:தென்காசி மாவட்டம், வாகைக்குளம் கிராமத்தை சேர்ந்த, ௫௬ வயது முத்துவின் வயலை பன்றிகள் சேதப்படுத்திஉள்ளன.அனுமதியின்றி, முத்து, தன் வயலில் மின்வேலி அமைத்திருந்தது தொடர்பாக,
 விவசாயி குடும்பத்துக்கு நீதி கிடைக்க நடவடிக்கை  வேண்டும் ; ஸ்டாலின்

சென்னை : 'விசாரணைக்கு அழைத்து சென்ற விவசாயி முத்துவின், உயிர் பறிப்பதற்கு காரணமான, வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

அவரது அறிக்கை:தென்காசி மாவட்டம், வாகைக்குளம் கிராமத்தை சேர்ந்த, ௫௬ வயது முத்துவின் வயலை பன்றிகள் சேதப்படுத்திஉள்ளன.அனுமதியின்றி, முத்து, தன் வயலில் மின்வேலி அமைத்திருந்தது தொடர்பாக, கடையம் சரக வனத்துறையினர் விசாரணைக்காக அழைத்து சென்று உள்ளனர். பின், கடையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில், அவர் இறந்து விட்டதாகக் கூறப்பட்டுள்ளது. முத்துவை விசாரணை என்ற பெயரில், நள்ளிரவில் அழைத்து சென்ற வனத்துறையினரே, அவரது உயிர் பறிக்கப்பட்டதற்கு காரணம். முத்து குடும்பத்தினருக்கு, அரசு இழப்பீட்டு நிதி அறிவிக்கப்பட்டிருப்பதன் வாயிலாக, வனத்துறை அதிகாரி நெல்லை நாயகம், பசுங்கிளி, முருகசாமி, சக்தி முருகன், மனோஜ், மணிகண்டன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.பாதிக்கப்பட்ட முத்து குடும்பத்தினருக்கு நீதி வழங்க வேண்டும்.இவ்வாறு, ஸ்டாலின் கூறிஉள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X