தென் சீன கடல் பகுதியில் போர் பயிற்சி அமெரிக்காவுக்கும் பூச்சாண்டி காட்டுது சீனா

Added : ஜூலை 26, 2020
Share
Advertisement
 தென் சீன கடல் பகுதியில் போர் பயிற்சி அமெரிக்காவுக்கும் பூச்சாண்டி காட்டுது சீனா

பீஜிங் : அமெரிக்காவின் அச்சுறுத்தலுக்கு மத்தியில், தென் சீன கடல் பகுதியில், சீன ராணுவத்தினர் போர் பயிற்சிகளை துவக்கியுள்ளனர்.

சக்தி வாய்ந்த ஏவுகணைகள், ராக்கெட்டுகள் இதில் சோதிக்கப்படஉள்ளதாக கூறப்படுகிறது. அண்டை நாடான சீனா, தென் சீன கடல் பகுதியை, சட்டவிரோதமாக, தொடர்ந்து உரிமை கொண்டாடி வருகிறது. அங்கு, ஆதிக்கம் செலுத்தும் விதமாக, செயற்கை தீவுகளை உருவாக்கி, இதர நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. எனினும், அந்த பிராந்தியத்தில் உள்ள பிலிப்பைன்ஸ், புரூனே, மலேஷியா, தைவான், வியட்நாம் உள்ளிட்ட நாடுகள், அந்த பகுதியில் உள்ள தீவுகள், தங்களுக்கு சொந்தமானவை எனக் கூறி வருகின்றன. இதனால், அப்பகுதியில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த விவகாரத்தை வைத்து, சீனாவை எச்சரிக்கும் நடவடிக்கைகளில், அமெரிக்கா அவ்வப்போது ஈடுபட்டு வருகிறது.

சில நாட்களுக்கு முன், அந்த பகுதிக்கு அமெரிக்க போர்க்கப்பல்கள் அனுப்பிவைக்கப்பட்டன. மேலும், 'தென் சீன கடல் பகுதி, சீனாவுக்கு சொந்தமல்ல' என, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் போம்பியோ கூறியிருந்தார். இது, சீனாவின் கோபத்தை அதிகரிக்கச் செய்தது.இந்நிலையில், அமெரிக்காவை எச்சரிக்கும் விதமாக, தென் சீன கடல் பகுதிக்கு அருகே, சீன ராணுவத்தினர் போர் பயிற்சிகளை துவக்கிஉள்ளனர். தென் சீன கடல் பகுதியின் நுழைவாயிலாக கருதப்படும், குவாங்டாங் மாகாணத்தின், லெய்சோவ் பகுதியில், இந்த பயிற்சிகள் நடைபெறுகின்றன. இதில், சீன கடற்படையினரும் இணைந்து, பயிற்சிகளில் ஈடுபடவுள்ளனர்.ஒரு வாரம் நடத்த திட்டமிட்டுள்ள இந்த பயிற்சிகளில், எதிரி நாட்டு கப்பல்கள் மற்றும் விமானங்களை குறிவைத்து தகர்க்கும் பயிற்சிகளும் மேற்கொள்ள இருப்பதாக தெரிய வந்துள்ளது. சக்தி வாய்ந்த வெடிபொருட்கள் மற்றும் ராக்கெட்டுகள் பரிசோதிக்கப்படவுள்ளதால், அந்த பகுதிக்குள் யாரும் வரவேண்டாம் என, சீன ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.காலி செய்யப்பட்ட அமெரிக்க துாதரகம்!அமெரிக்காவில் சீன துாதரகம் மூடப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், சீனாவின் செங்டுவில் உள்ள அமெரிக்க துாதரகத்தை மூட, சீன அரசும், சமீபத்தில் உத்தரவிட்டது. இதையடுத்து, அமெரிக்க துாதரகம் அங்கிருந்து காலி செய்யப்பட்டது. பொருட்களை ஏற்றிச் செல்ல, மூன்று லாரிகள் துாதரகத்திற்கு அருகே நேற்று வந்தன. இதை காண, அப்பகுதியில் சீன மக்கள் பெருமளவு குவிந்தனர். பலரும், அந்த காட்சிகளை புகைப்படம் எடுத்தனர். அந்த பகுதி முழுதும், போலீஸ் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X