ஆர்ப்பரிப்புக்கான நாள்

Added : ஜூலை 26, 2020
Share
Advertisement
ஆர்ப்பரிப்புக்கான நாள்

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டப்படும், ஆகஸ்ட், 5ம் தேதி, மிகவும், மகிழ்ச்சிக்கான, ஆர்ப்பரிப்புக்கான நாள். இதில் பங்கேற்க லட்சக்ணக்கான மக்கள் ஆர்வமாக உள்ளனர். ஆனால், கொரோனா பரவலால், அவர்களால் பங்கேற்க முடியாது. அதனால், அடிக்கல் நாட்டு விழாவை, 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக நடத்தினால், மக்கள் பலரும் கண்டுகளிப்பர்.
- உத்தவ் தாக்கரே , மஹாராஷ்டிரா முதல்வர், சிவசேனா

கேலி செய்திருக்க வேண்டாம்

மத்திய பிரதேச முதல்வர், சிவராஜ் சிங் சவுகான், கொரோனாவிலிருந்து குணமடைய பிரார்த்திக்கிறேன். கொரோனா பரவல் தீவிரமாக இருந்தபோது, 'கொரோனா குறித்து அச்சப்படத் தேவையில்லை; அது, சக்தியை காப்பாற்றும் ஆயுதம்' என, அவர் கூறினார். வைரசை கேலி செய்து, அலட்சியப்படுத்தாமல் இருந்திருந்தால், அவர் பாதிக்கப்பட்டிருக்கமாட்டார் என, நினைக்கிறேன்.

- கமல்நாத் , ம.பி., முன்னாள் முதல்வர், காங்.,
கொரோனா மறைந்து விடும்

கொரோனா வைரசை வெற்றிகரமாக எதிர்கொள்ள, மக்கள் அனைவரும், ஆஞ்சநேயரை துதிக்க வேண்டும். மக்கள் தங்கள் வீடுகளில், ஹனுமன் துதியான, 'ஹனுமன் சாலிசா'வை தினமும், ஐந்து முறை பாராயணம் செய்ய வேண்டும். ஆகஸ்ட், 3ம் தேதி வரை பாராயணம் செய்தால், நாட்டை விட்டு, கொரோனா மறைந்து விடும்.

- பிரக்யா சிங் தாக்குர், எம்.பி,, - பா.ஜ.,

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X