பொது செய்தி

இந்தியா

4.42 லட்சம் பேரிடம் பரிசோதனை 48,661 பேருக்கு தொற்று உறுதி

Added : ஜூலை 26, 2020
Share
Advertisement

புதுடில்லி : நாட்டில், கடந்த, 24 மணி நேரத்தில், 4.42 லட்சம் பேரிடம், கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டதில், 48 ஆயிரத்து, 661 பேரிடம் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இது குறித்து, மத்திய சுகாதார அமைச்சகத்தின் அறிக்கை:கொரோனா வைரஸ் தொற்றினை கண்டறிய, நாடு முழுதும், கடந்த, 24 மணி நேரத்தில், 4.42 லட்சம் பேரிடம், பரிசோதனை நடத்தப்பட்டது. இதில், 48 ஆயிரத்து, 661 பேரிடம் தொற்று உறுதிசெய்யப்பட்டது.இவர்களுடன், வைரஸ் தொற்றால் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 13 லட்சத்து, 85 ஆயிரத்து, 522ஆக உயர்ந்துள்ளது.பாதிப்பில், 3.66 லட்சம் பேருடன், மஹா., முதலிடத்தில் தொடர்கிறது. அடுத்த இடத்தில், 2.07 லட்சம் பேருடன் தமிழகமும், 1.30 லட்சம் பேருடன், டில்லி மூன்றாம் இடத்திலும் உள்ளன.

கர்நாடகாவில், 90 ஆயிரத்து, 942 பேரும், ஆந்திராவில், 88 ஆயிரத்து, 671; உ.பி.,யில், 63 ஆயிரத்து, 742; மே.வங்கத்தில், 56 ஆயிரத்து, 377; குஜராத்தில், 54 ஆயிரத்து, 626; தெலுங்கானாவில், 52 ஆயிரத்து, 466 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.வைரஸ் தொற்றில் இருந்து, 8.86 லட்சம் பேர் மீண்டுள்ளனர். இது, தொற்றில் இருந்து குணமடைந்தோர் விகிதத்தை, 63.92 சதவீதமாக உயர்த்தியுள்ளது. வைரஸ் பாதிப்பிற்கு, 4.68 பேர் சிகிச்சை பெறுகின்றனர். நாட்டில், நேற்று மட்டும், மஹா.,வில், 257 பேர், தமிழகத்தில், 89; கர்நாடகாவில், 72; ஆந்திராவில், 52; மே.வங்கத்தில், 42; உ.பி.,யில், 39; டில்லியில், 29; குஜராத்தில், 22 பேர் உள்ளிட்ட, 705 பேர் இறந்துள்ளனர்.

இதன் மூலம், நாட்டில் இதுவரை பலியானோர் எண்ணிக்கை, 32 ஆயிரத்து, 63 ஆக உயர்ந்துள்ளது. ஒட்டுமொத்த இறப்பிலும், 13 ஆயிரத்து, 389 பேருடன், மஹா., முதலிடத்தில் உள்ளது. டில்லியில், 3,806 பேரும், தமிழகத்தில், 3,409; குஜராத்தில், 2,300 இறந்துள்ளனர். கர்நாடகாவில், 1,796; உ.பி.,யில், 1,387; மே.வங்கத்தில், 1,332 பேர் பலியாகி உள்ளனர். ஆந்திராவில், 985; ம.பி.,யில், 799; ராஜஸ்தானில், 613 பேரும் இறந்துள்ளனர்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X