சிறப்பு பகுதிகள்

சொல்கிறார்கள்

விவசாயிகளின் பிரச்னை அறிய விவசாயம்!

Added : ஜூலை 26, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 விவசாயிகளின் பிரச்னை அறிய  விவசாயம்!

நெருக்கடி நிறைந்த பெங்களூருவில், தன் வீட்டின் மாடியில், விவசாயம் செய்யும், தமிழ், கன்னட மொழிகளில், பல படங்களில் நடித்துள்ள நடிகை மாளவிகா: பூர்வீகம் பெங்களூரு தான். டில்லியில் ஸ்கூல் படிப்பையும், பெங்களூருவில் சட்டப் படிப்பையும் முடித்தேன். அப்பா, வங்கி அதிகாரியாக இருந்தவர். பா.ஜ., தேசிய செய்தித் தொடர்பாளராகவும் இருக்கிறேன். என் கணவர் அவினாஷ், பிரபல கன்னட நடிகர்.

படிப்பு, வீடு, நகர வாழ்க்கை மட்டும் தான் என் உலகமாக இருந்தது. பிறகு சினிமா பயணம். அதில் குறுகிய காலம் தான் இருந்தேன். அதன் பின், பல ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறேன். விவசாயிகள் பிரச்னைகள், அதற்கு தீர்வு போன்றவை குறித்து, ஆட்சியாளர்களிடம் முறையிடுவேன். அப்போது ஒருநாள், 'விவசாயிகளின் உண்மையான பிரச்னைகளை தெரிந்து கொள்ள, விவசாயியாக இருந்தால் தான் சரியாக இருக்கும்' என, நண்பர் ஒருவர் கூற, நாமே ஏன் விவசாயம் செய்யக் கூடாது என, முடிவு செய்தேன்.

நிலம் வாங்கி விவசாயம் செய்வது இப்போதைக்கு சாத்தியமில்லை. அதனால், வீட்டிலேயே தோட்டம் போட முடிவு செய்தேன். என் வீடு கொஞ்சம் பெரியது. மொட்டை மாடிப் பரப்பளவு மட்டும், 4,000 சதுர அடி. தடுப்புச் சுவரைச் சுற்றி, மண்ணை கொட்டி, தென்னை நார்க்கழிவு, மண்புழு உரம் கலந்து, செடிகள் வளர்க்கிறேன். கேரட், முள்ளங்கி, பீட்ரூட், குடமிளகாய், பீன்ஸ், பச்சை மிளகாய், தக்காளி, வெண்டை, கத்திரிக்காய், பாகல், கொத்தமல்லி தழை, அவரை உட்பட, 50-க்கும் மேற்பட்ட பயிர் வகைகளை வளர்க்கிறேன்.

மேலும், பாலக்கீரை, வெந்தயக்கீரை, அரைக்கீரை, தண்டுக்கீரை உட்பட பல்வேறு வகையான கீரைகளையும் வளர்க்கிறேன். எங்கள் வீட்டுத் தேவையில், 70 சதவீத காய்கறிகள் மாடித்தோட்டத்தில் கிடைக்குது. வெளியூர், வெளிநாடுகளுக்குப் போறப்போ அங்குள்ள நர்சரிகளுக்குத் தவறாமல் போய், பல்வேறு விதைகளை வாங்கிட்டு வருவேன். அதை என் மாடித்தோட்டத்தில் பயிரிடுவேன்.

வளர்ச்சி எப்படி இருக்குனு, தொடர்ந்து சோதனை பண்ணிட்டே இருப்பேன். நகரில் பிறந்து வளரும் குழந்தைகளிடம், அரிசி எப்படி விளையுதுன்னு கேட்டால், எந்த மரம் என தெரியாது என்பர். அந்த அளவுக்குத் தான், குழந்தைகளுக்கு, விவசாயம் பற்றி தெரிகிறது. அந்த குழந்தைகள் பெரிய ஆட்களாக ஆன பிறகு, விவசாயம் மற்றும் விவசாயிகள் பிரச்னையை எப்படி உணர்ந்து கொள்வர்...

என் வீட்டிலுள்ள நபர்கள், எங்கள் மாடி தோட்டத்தைப் பார்த்து ரசிக்கலாம். ஆனால், தண்ணீர் விடுவது உட் பட எந்தப் பராமரிப்பு வேலைகளையும் செய்யக்கூடாது. நான் மட்டும் தான் அந்தப் பணிகளை செய்வேன்; அந்த அளவுக்கு, எனக்கு பிடித்த தொழிலாகி போனது விவசாயம்!

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajalakshmi - Kuwait City,குவைத்
27-ஜூலை-202012:47:19 IST Report Abuse
Rajalakshmi வாழ்த்துக்கள். நாம் அனைவருமே நாம் உண்ணும் உணவு எங்கிருந்து வருகின்றது, பால் கொடுப்பது பசுவும், எருமையும் போன்ற முக்கியமான விஷயங்கள் பற்றி சிறிய வயது முதல் தெரிந்து கொள்ள வேண்டும். நானும் சிறிய வயதில் அரிசி, பருப்பு Store room -லிருந்து வருகிறது என்றுதான் பதில் சொல்லியிருப்பேனோ என்னவோ ...உருளைக்கிழங்கு பூமிக்கடியில் என்பதும் சிறிய வயதில் தெரியாது. வீட்டிற்கெதிரே பசுமாடு இருந்ததால் பட்டன் மூலம் பால் வரும் என்று பிழையாக நினைக்கவில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X