சிறப்பு பகுதிகள்

கந்தனுக்கு அரோஹரா

வேல் வரைந்து 'கருப்பர் கூட்டத்துக்கு' கோவை சிறுமிகள் கண்டனம்

Updated : ஜூலை 27, 2020 | Added : ஜூலை 26, 2020 | கருத்துகள் (25)
Share
Advertisement
கோவை: 'கருப்பர் கூட்டம்' என்ற பெயரில் செயல்பட்ட யூடியூப் சேனலில், கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறு பரப்பியவர்களை கண்டித்து, கோவையில் சுவர்களில் வேல் வரைந்து சிறுமிகள் தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர். கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலில் இந்து மத கடவுள்களை ஆபாசமாக சித்தரித்தும், புராணங்களை கேலி செய்தும் தொடர்ந்து வீடியோக்கள் வெளியிடப்பட்டு வந்தன. இதன்

கோவை: 'கருப்பர் கூட்டம்' என்ற பெயரில் செயல்பட்ட யூடியூப் சேனலில், கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறு பரப்பியவர்களை கண்டித்து, கோவையில் சுவர்களில் வேல் வரைந்து சிறுமிகள் தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர்.latest tamil news
கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலில் இந்து மத கடவுள்களை ஆபாசமாக சித்தரித்தும், புராணங்களை கேலி செய்தும் தொடர்ந்து வீடியோக்கள் வெளியிடப்பட்டு வந்தன. இதன் தொடர்ச்சியாக முருகனின் கந்த சஷ்டி கவசம் குறித்தும் ஆபாசமாக சித்தரித்து வீடியோ ஒன்று அந்த யூ டியூப் சேனலில் பதிவேற்றம் செய்யப்பட்டதாகவும், பின்னர் அது நீக்கம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.


latest tamil newsஇதையடுத்து, முருகப் பெருமானை இழிவுபடுத்தியவர்களை கைது செய்யக் கோரி, பல்வேறு தரப்பினரும் போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்நிலையில் இன்று கருப்பர் கூட்ட யூடியூப் சேனலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை உக்கடம் பகுதியில் 10க்கும் மேற்பட்ட பெண் குழந்தைகள், சாலையோர சுவர்களில் முருகனின் அடையாளமான வேலினை வரைந்து நூதன முறையில் கண்டனம் தெரிவித்தனர். 'கந்த சஷ்டி கவசம் குறித்து யாராவது அவதூறு பரப்பினால், வீதியில் இறங்கி போராடுவோம்' எனவும் அக்குழந்தைகள் எச்சரித்துள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
konanki - Chennai,இந்தியா
28-ஜூலை-202014:47:01 IST Report Abuse
konanki ஏன் நல்லது அல்ல? நீங்கள் உங்கள் பள்ளிகளில் சேரும் மற்ற மதத்தை சார்ந்த குழந்தைகளிடம் உங்கள் மதத்து பிரார்த்தனைகளை கட்டாயமாக பாடப் சொல்கிறீர்களே அது தான் நல்லதா? உங்கள் பள்ளிகளில் படிக்கும் எங்கள் பெண் குழந்தைகளை நெற்றியில் பொட்டு வைத்து வரக்கூடாது என்று சொல்கிறார்களே அது தான் நல்லதா? ஆண் குழந்தைகளை நெற்றியில் திருநீறு சந்தனம் பூசி வரக்கூடாது என்று சொல்கிறார்களே அது தான் நல்லதா? , ஆனால் இன்னும் அந்த மாதிரி பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்கும் பெற்றோர் களை என்ன செய்வது?
Rate this:
Cancel
SIVA G india - chennai,இந்தியா
27-ஜூலை-202016:09:26 IST Report Abuse
SIVA G  india இந்துவிரோத கட்சிகள் பணம் கொடுத்தோ, மிரட்டியோ, பணத்தை கொடுத்து சத்தியம் பெற்றோ அல்லது இவை மூன்றையும் செர்த்து "பணம் கொடுத்து மிரட்டி சத்தியம்" வாங்கினாலும் இவர்களுக்கு கட்டாயம் நாம் ஓட்டு போடக்கூடாது. நம் தெய்வங்களை கேவலபடுத்திய இவர்களிடம் சத்தியம் செய்தாலும் இவர்களுக்கு மட்டும் நாம் ஓட்டு போடகூடாது. இவர்கள் விசயத்தில் தெய்வகுற்றம் ஆகாது என ஆன்மீக பெரியவர்கள் மக்களுக்கு சொன்னால் நலம். சுமார் 200 வருடங்களுக்கு முன்பிருந்தே எல்லா இந்து மக்கள் வீடுகளில் நான்கு பெண் தெய்வங்களுக்கு மத்தியில் வினாயகர் படத்துடனும், கருப்பண்ணசாமி வெங்காடசலபதி, சிவன், முருகன். அனுமார்,சீதா ராம கல்யாணம் என எல்ல தெய்வபடங்களை ஒரே பிரேமில் வைத்தோ, ஒரு பக்க சுவரில் வைத்தோ இன்றும் வணங்கிவருகிறார்கள்.இன்னும் ஒரு படி மேலே போய் ,ஆதிசங்கரர், சீரடி சாய்பாபா, மகா பெரியவர், ரமணர், யோகிராம் சூரத்குமார்,அன்னை படங்களையும் சேர்த்தே வணங்குகிறார்கள். மேலும் மாற்று மத கடவுள் படங்களையும் சில இந்துகள் வணங்குகிறார்கள். சில நேரங்களில் ஏதேனும் ஒரு படத்திற்கு பூ வைக்க மறந்தாலோ குற்ற உணர்வுடன் அடுத்த நாள் முதல் சரி செய்து கொள்ளும் இந்துகளை திராவிட கட்சிகள் பிரித்தாள விடவே கூடாது. இந்த கட்சிகள் இந்துமத நம்பிக்கையாளர் போல மொட்டை அடித்து அங்கபிரதட்சணமே செய்தாலும் குறைந்தது 10 வருடம் ஓட்டு போடகூடாது.
Rate this:
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
27-ஜூலை-202012:40:25 IST Report Abuse
A.George Alphonse இது நல்லது அல்ல.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X