காங்., முழுநேர தலைவர் எப்போது? கட்சிக்குள் வெடிக்குது அதிருப்தி

Updated : ஜூலை 28, 2020 | Added : ஜூலை 26, 2020 | கருத்துகள் (18)
Share
Advertisement
Congress,Rahul,Sonia, Sonia Gandhi, Rahul Gandhi,காங்கிரஸ்,ராகுல்,ராகுல் காந்தி, சோனியா, சோனியா காந்தி

புதுடில்லி: ''காங்கிரஸ் கட்சிக்கு, முழு நேர தலைவரை தேர்வு செய்வது, அவசியமானது என்பதுடன், இந்த பிரச்னையில், கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், முன்னுரிமை அளித்திருக்க வேண்டும்'' என, காங்கிரஸ் எம்.பி., சந்தீப் தீட்சித், குரல் எழுப்பியுள்ளார்.

காங்., தலைவர் பதவியில் இருந்து ராகுல் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, தற்காலிக தலைவராக அவரது தாயார் சோனியா, ஓராண்டாக நீடிக்கிறார். சோனியா உடல் நலம் குறைந்துள்ள நிலையில், காங்கிரஸ் முழு நேர தலைவரின்றி இயங்குவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. ராகுலை மீண்டும் தலைவராக பொறுப்பேற்கச் செய்வதில், கட்சியின் சில தலைவர்கள் முயற்சித்து வருகின்றனர்.


தலைமை அவசியம்


ராகுலுக்கு நெருக்கமாக இருந்த ஜோதிராதித்யா சிந்தியாவை தொடர்ந்து, ராஜஸ்தானில் சச்சின் பைலட்டும் உள்கட்சி மோதலில், தலைமைக்கு எதிராக கொடி உயர்த்தி உள்ளார்.இதனால், ம.பி.,யை தொடர்ந்து, ராஜஸ்தான் மாநிலத்திலும், காங்., அரசு கவிழும் நிலை உருவாகி வருகிறது. இந்நிலையில், கட்சிக்கு முழு நேர தலைவர் இல்லாததே, இது போன்ற பிரச்னைகளை கையாள முடியாததற்கு காரணம் என்ற அதிருப்தியும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், ''கட்சிக்கு முழுநேர தலைவர் தேவை,'' என, காங்., இளம் தலைவர்களில் ஒருவரும், டில்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்தின் மகனுமான, சந்தீப் தீட்சித் கூறியுள்ளார்.


latest tamil news



இதுதொடர்பாக, நேற்று அவர் கூறியதாவது:காங்கிரஸ் கட்சியின், இடைக்கால தலைவர் பொறுப்பில் உள்ள சோனியாவின் பதவிக்காலம், ஆக., மாதம் முடிவுக்கு வருகிறது. கட்சிக்கு ஒரு முழுநேர தலைவரை நியமிக்க, அதிக நேரம் தேவையில்லை. கட்சி யாரை நியமனம் செய்கிறது, என்பது பிரச்னை இல்லை. கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், இந்த பிரச்னையை, முன்னுரிமையுடன் கையாண்டிருக்க வேண்டும்.

காங்கிரஸ் தலைவரை, தேர்தல் அல்லது தேர்வு முறையில் நியமிப்பது பற்றி கவலை இல்லை. ஆனால், உடனடியாக தலைமை அவசியம் என்பதை உணர வேண்டும்.ஏனெனில், இடைக்கால தலைமை என்பது உறுதியான நடவடிக்கைகளுக்கு தடையாக உள்ளது.


நிரந்தர தலைவர்


தலைமை என்பது, இளைஞர்களுக்கும், முதியவர்களுக்கும் இடையிலான பிரச்னை இல்லை. இது, கட்சியை அபகரிக்க நினைப்பவர்களுக்கும், கடின உழைப்பாளிகளுக்கும் இடையிலான பிரச்னை.இடைக்கால தலைவராக, சோனியா பாராட்டத்தக்க வகையில் செயல்படுகிறார். அடுத்தவர்கள் பொறுப்பேற்க வேண்டும் என்பதற்காக மட்டுமே, தலைவர் பதவியில் இருந்து, அவர் ஏற்கனவே விலகினார். அந்த பொறுப்பிற்கு, ராகுலை அவர் நினைதிருக்கலாம்.

இடைக்கால தலைவர் என்பது, கட்சியின் நீண்ட கால முடிவுகளை, எடுக்க முடியாத பதவியாகும். எனவே, எங்களின் தற்போதைய தேவை, ஒரு நிரந்தர தலைவர். அது, ராகுலா அல்லது வேறு யாருமா என்பது பற்றி, எங்களுக்கு கவலை இல்லை.கட்சியின் அதிகாரப்பூர்வ முடிவுகளை எடுக்கும் செயற்குழு உறுப்பினர்கள் கூடி, இந்த பிரச்னைக்கு முன்னதாகவே தீர்வு காண்பார்கள் என, எதிர்பார்த்தோம்.

ஆனால், அவர்கள், இந்த சவாலை சமாளிக்க முடியாத நிலையில் உள்ளனர். தலைமை பொறுப்பிற்கு வர விரும்பவில்லை என ராகுல் தெளிவாக கூறிய நிலையில், அடுத்தகட்டத்தை, செயற்குழுவினர் சிந்தித்து இருக்க வேண்டும்.


உதாரணமாகும்


செயற்குழுவால், குறிப்பிட்ட ஒருவரை தேர்வு செய்ய முடியாத நிலையில்தான், இடைக்கால தலைவராக, சோனியா பொறுப்பேற்கும் நிலை உருவானது. ஜோதிராதித்ய சிந்தியா பா.ஜ.,விற்கு சென்றது மற்றும் ராஜஸ்தானில், சச்சின் பைலட் மேற்கொள்ளும் நடவடிக்கைகளில், செயற்குழுவால், இறுதியான முடிவுகளை எடுக்க முடியவில்லை என்பதும், இதற்கு உதாரணமாகும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
27-ஜூலை-202020:27:56 IST Report Abuse
Endrum Indian இல்லாத ஒரு கட்சிக்கு தலைவர் எதற்கு???
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
27-ஜூலை-202019:03:11 IST Report Abuse
RajanRajan அந்த டூமிலன் அண்ணன் கிங்பின்னை தலைவராக்கிடுங்க. பிரச்சினை தீர்ந்தது. நல்ல ஒரு அடிமை வுட்டுராதீங்க.
Rate this:
Cancel
கொக்கி குமாரு - சைதாப்பேட்டை,இந்தியா
27-ஜூலை-202018:51:36 IST Report Abuse
கொக்கி குமாரு பப்பு பாயை காங். முழுநேர தலைவரா ஆக்கிடுங்க. அப்பதான் பிஜேபிக்கு ரொம்ப வசதியா இருக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X