பொய் செய்திகள் வெளியீடு ஜேக் மா ஆஜராக உத்தரவு

Added : ஜூலை 26, 2020
Share
Advertisement

புதுடில்லி : பொய் செய்திகள் வெளியிட்டதாகவும், செய்திகளை திருத்தி வெளியிட்டதாகவும் தொடரப்பட்ட வழக்கில், சீனாவைச் சேர்ந்த, 'அலிபாபா' நிறுவனம் மற்றும் அதன் உரிமையாளர் ஜேக் மா ஆஜராக, ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியா - சீனா இடையேயான எல்லைப் பிரச்னை தீவிரமடைந்து வருகிறது. சீனாவை சேர்ந்த, 'டிக்டாக்' உட்பட, 59, 'மொபைல்போன் ஆப்'களுக்கு மத்திய அரசு தடை விதித்தது. இதில், அலிபாபா நிறுவனத்தின், 'யுசி பிரவுசர், யுசி நியூஸ்' ஆகியவையும் அடங்கும்.இந்த நிலையில், அலிபாபா நிறுவனத்தின் துணை நிறுவனமான, 'யுசி வெப்' என்ற நிறுவனத்தில், இயக்குனராக பணியாற்றிய, புஷ்பேந்திர சிங் பர்மர் என்பவர், குருகிராம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். மனுவில் அவர் கூறியுள்ளதாவது:யுசி பிரவுசர் உட்பட, அலிபாபாவுக்கு சொந்தமான இந்த இணையதள நிறுவனங்கள், பல பொய் செய்திகளை வெளியிட்டன. சீனாவுக்கு எதிராக உள்ள செய்திகளை திருத்தி வெளியிட்டன.

உதாரணத்துக்கு, 2,000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவிக்கப்பட உள்ளதாக செய்தி வெளியிட்டது. மேலும், இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் துவங்கியதாகவும் செய்தி வெளியிடப்பட்டது.இதுபோன்ற பொய் செய்திகள் வெளியிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், என்னை பணியில் இருந்து நீக்கியுள்ளனர். பொய் செய்திகளை வெளியிட்டு, அரசியல் மற்றும் சமூக குழப்பங்களை ஏற்படுத்த முயற்சிகள் நடக்கின்றன. இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.இதை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட, குருகிராம் நீதிமன்றம், 'அலிபாபா நிறுவனம், ஜேக் மா மற்றும் 12 உயர் அதிகாரிகள், வரும், 29ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் அல்லது அவர்களுடைய சார்பில் வழக்கறிஞர் ஆஜராக வேண்டும். இந்தப் புகார் குறித்து, ஒரு மாதத்துக்குள் பதிலளிக்க வேண்டும்' என, உத்தரவிட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X