அரசியல் செய்தி

தமிழ்நாடு

வீடுதோறும் வேல்பூஜை தமிழக பா.ஜ., திட்டம்

Added : ஜூலை 26, 2020
Share
Advertisement

கந்த சஷ்டி கவசம் இழிவுபடுத்தப்பட்டதால், வீடுகள் தோறும் வேல்பூஜை நடத்த, தமிழக பா.ஜ., திட்டமிட்டுள்ளது.

கருப்பர் கூட்டம் என்ற பெயரில் ஒளிபரப்பாகி வந்த, 'யு டியூப்' சேனலில், கந்த சஷ்டி கவசத்தை மிகவும் கொச்சையாக விமர்சித்த, வீடியோ வெளியானது. இது தொடர்பாக, யு டியூப் சேனல் நடத்தியவர்களை போலீசார் கைது செய்ய வேண்டும் என, சமீபத்தில், தமிழக பா.ஜ., சார்பில் கண்டன போராட்டம் நடத்தினர். அதனால், அந்த சேனல் நடத்தியவர்களை, போலீசார் கைது செய்தனர். விசாரணையில், செந்தில்வாசன் என்பவர், தி.மு.க., - ஐ.டி., அணியில் பணியாற்றியது தெரிய வந்தது.

நேற்று முன்தினம், தமிழக பா.ஜ., சார்பில், 'கொரோனாவும், அயலகத் தமிழர்கள் உணர்வுகளும்' என்ற தலைப்பில், வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக, ஆலோசனை கூட்டம், மாநில தலைவர் முருகன் தலைமையில் நடந்தது. இதில், சிறப்பு விருந்தினராக, தேசிய பொதுச்செயலர் முரளிதர ராவ் பங்கேற்றார். அவர் பேசுகையில், ''கருப்பர் கூட்டத்தின் பின்னணியில், தி.மு.க., உள்ளது. ஹிந்து மக்களை ஒற்றுமைப்படுத்த வேண்டும்; தி.மு.க.,வை அரசியல் ரீதியாக பலவீனப்படுத்த வேண்டும்,'' என்றார்.இந்நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும், வரும், ௯ம் தேதி வேல் பூஜை நடத்தி, முருகரை வழிபடவும், தி.மு.க.,விற்கு எதிர்ப்பு தெரிவிக்கவும், தமிழக பா.ஜ., திட்டமிட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X