டில்லி ராணுவ மருத்துவமனைக்கு ரூ.20 லட்சம் வழங்கிய ஜனாதிபதி

Added : ஜூலை 26, 2020
Share
Advertisement
 டில்லி ராணுவ மருத்துவமனைக்கு  ரூ.20 லட்சம் வழங்கிய ஜனாதிபதி

புதுடில்லி : டில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு, கொரோனா வைரஸ் சிகிச்சை உபகரணங்கள் வாங்க, ஜனாதிபதி, ராம்நாத் கோவிந்த், நேற்று, 20 லட்சம் ரூபாய் நன்கொடை அளித்தார்.

கார்கில் போரில், பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா வெற்றி பெற்று, 21 ஆண்டுகள் ஆகிறது. அந்த வெற்றி நாள், 'கார்கில் விஜய் திவாஸ்' என, கொண்டாடப்படுகிறது.இந்த நாள், நேற்று அனுசரிக்கப்பட்டது. இதனால், கார்கில் போரில் பங்கேற்ற வீரர்களை நினைவு கூரும் வகையில், டில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில், கொரோனா வைரஸ் சிகிச்சை கருவிகளை வாங்குவதற்காக, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், நேற்று, 20 லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கினார்.இது குறித்து, ஜனாதிபதி மாளிகையின் அறிக்கை:கார்கில் போரில், வீரத்துடன் போராடி நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், டில்லி ராணுவ மருத்துவமனைக்கு, 20 லட்சம் ரூபாயை வழங்கி உள்ளார்.

ஜனாதிபதி மாளிகையில், தேவையற்ற செலவினங்களை குறைக்க, ஜனாதி பதி உத்தரவிட்டு இருந்தார். இதன்படி, சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்தும் வாகனம் வாங்கும் திட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இதுபோல், அவசியமற்ற செலவினங்களை தவிர்த்ததால் கிடைத்த தொகை, மருத்துவமனைக்கு வழங்கப்பட்டுள்ளது.நாட்டில் உள்ள நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள், பொருளாதார சிக்கன நடவடிக்கைகளில் ஈடுபடுவதையும், அதனால் சேமிக்கப்படும் தொகையை, வைரஸ் தடுப்பில் பங்கேற்பவர்களுக்கு உதவுவதையும், இந்த நடவடிக்கை ஊக்குவிக்கும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X