பொது செய்தி

தமிழ்நாடு

வாகனங்களுக்கு 'ரன்னிங் எப்.சி.,' வழங்க தடை

Added : ஜூலை 26, 2020
Share
Advertisement

சென்னை : வாகனங்களுக்கு 'ரன்னிங் எப்.சி.,' வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில், வணிக பயன்பாட்டு வாகனங்களுக்கு, ஒவ்வொரு ஆண்டும், எப்.சி., என்ற தகுதிச் சான்று வழங்கப்படுகிறது.

அதாவது, வாகனங்களில், பிரேக், அவசர வழி, ஹாரன், முகப்பு, எச்சரிக்கை விளக்குகள், டயர்கள், கியர்கள்உள்ளிட்டவற்றின் தகுதியை, மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சோதனை செய்து, ஒப்புதல் வழங்கிய பின், தகுதிச் சான்று வழங்கப்படும்.இதை, வாகனம் பதிவு செய்த, வட்டார போக்குவரத்து அலுவலகமான, ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் மட்டுமே பெற வேண்டும். ஆனால், பல வாகனங்கள், வணிக ரீதியில் வெளியூர் சென்றிருக்கும் போது, எப்.சி., காலாவதியாகும் தேதிக்குள் திரும்ப முடியாமல், இக்கட்டான சூழலில் மாட்டிக் கொள்வதும் உண்டு.

இந்நிலையில், கமிஷனர் அலுவலகத்தில் விளக்கமளித்து, எப்.சி.,க்கான தொகையை செலுத்தி, வாகனம் இருக்கும் இடத்தில் உள்ள, ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் காட்டி, தகுதிச் சான்று பெறலாம்.ஆனால், பல ஆர்.டி.ஓ.,க்கள், வாகனத்தை பார்க்காமலேயே, வாகனம் நல்ல முறையில் உள்ளதாக, தகுதிச் சான்று வழங்குவதும் நடைமுறையில் உள்ளது. இதற்கு, புரோக்கர்கள் வழியாக, வாகன உரிமையாளர்கள் கூடுதல் தொகை கொடுத்து விடுவர். இந்த முறைகேடுக்கு, ஆர்.டி.ஓ., அலுவலகங்களில் சொல்லப்படும் வார்த்தை தான், ரன்னிங் எப்.சி., இதுபோல், 'இனி யாரும், வாகனத்தை பார்க்காமல் எப்.சி., வழங்க கூடாது' என, போக்குவரத்து கமிஷனர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இது குறித்து, நேற்று முன்தினம் பயிற்சி வகுப்பும் நடத்தி உள்ளார். அதற்கேற்ப, வாகனத்தின் நான்கு பக்கங்களையும் புகைப்படம் எடுத்து பதிவேற்றும் வகையில் 'வாகன்' மென்பொருளில், மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X